கருணாநிதி மறைவு குறித்து கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் கடம்பூர் ராஜூ - துரைமுருகன்

ஒரு அமைச்சருக்குரிய தகுதிகளை இழந்து கீழ்த்தரமாக பேசியிருக்கிறார் கடம்பூர் ராஜூ என கண்டனம்...

துரைமுருகன் கண்டனம் : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது அதிமுக. அதில் தலைமையேற்று பேசியிருந்தார் தமிழகத்தின் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.

அப்போது கருணாநிதியின் சமாதி மெரினாவில் அமைந்ததிற்கு அதிமுகவின் பெருந்தன்மையே காரணம் என்றும் என்றும், கருணாநிதியின் சமாதி அதிமுக அளித்த பிச்சை என்றும் சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசினார் கடம்பூர் ராஜூ.

மேலும் படிக்க : மெரினாவில் கருணாநிதியின் சமாதி அதிமுக அளித்த பிச்சை – கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூவுக்கு கண்டனம் தெரிவித்த துரைமுருகன்

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்களை பதிவு செய்தனர் திமுக கட்சினர். இந்த தரமற்ற பேச்சுக்கு பதில் தரும் விதமாக தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார் திமுக கட்சியின் பொருளாளர் துரைமுருகன்.

ராஜாஜி அரங்கில் இறுதி அஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதிற்கும் மெரினாவில் சமாதிக்கு இடம் கிடைத்ததிற்கும் அதிமுக தான் காரணம் என்று கடம்பூர் ராஜூ கூறியதை மேற்கோள் காட்டி “ராணுவ மரியாதை மத்திய அரசு வழங்கியது. மெரினாவில் இடம் வேண்டுமென வழக்கு பதிவு செய்யத் தெரிந்த எங்களுக்கு ராஜாஜி அரங்கில் இறுதி அஞ்சலிக்கு அனுமதியையும் முறையாக வாங்கத் தெரியாதா ? என்றும் கேள்வி எழுப்பினார் துரை முருகன்.

சர்ச்சைக்கு பதில் கூறிய கடம்பூர் ராஜூ

ஜெயலலிதாவின் சமாதியை திமுகவினர் ஆட்சிக்கு வந்த பின்பு இடிப்பார்கள் என்று கூறியதால் தான் நான் அவ்வாறு பேசினேன் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார் கடம்பூர் ராஜூ. அது குறித்து முழுமையான செய்தியைப் படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close