chennai-rain | edappadi-k-palaniswami | அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சென்னை வானிலை ஆய்வு மையம் உரிய வகையில் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் தி.மு.க அரசு திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கவில்லை” என்றார்.
மேலும், “சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தினால் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து, “ரூ.4 ஆயிரம் கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றதாக கூறியது என்ன ஆனது? என்றும் கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து, “நிவாரண முகாம்களில் உணவு, மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை; மக்கள் அவதிப்படுகிறார்கள்” என்றும் கூறினார்.
தொடர்ந்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் பருவமழை தொடங்கும் முன்பே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன” என்றார்.
மேலும், அதிமுக ஆட்சியின் திட்டங்களால் இந்த 4 ஆயிரம் கோடி திட்டப் பணிகள் வந்ததாகவும், தற்போது திமுக அரசின் திட்டங்களால் மக்களுக்கு பயன் இல்லாமல் போய்விட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை, “மிக்ஜாம்” புயலாக வலுப்பெற்றது.
இதையும் படிங்க : மிக்ஜாம் புயல்.. உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி தேவை: திமுக வலியுறுத்தல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“