”என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என்று களம் இறங்கியுள்ளேன்” – ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த இரண்டு நாட்களில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி காந்த். 

By: Updated: December 3, 2020, 02:15:29 PM

Election 2021 : Rajinikanth will launch the party on January 2021 : ரஜினி மக்கள் மன்ற மாவட்ட  நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்த 3 நாட்களில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நவம்பர் 30ம் தேதி அன்று ஆலோசனையில் ஈடுபட்டார் ரஜினி.  ஆலோசனையில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 52 நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.  10 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை 12 மணி வரை நடைபெற்றது.

 

ஜனவரியில் துவங்க உள்ள கட்சி குறித்து டிசம்பர் 31ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும்  மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்று கூறியுள்ள அவருடைய ட்விட்டர் பதில் இப்போ இல்லைன்னா எப்பவும் இல்ல என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.  வரப்போகின்ற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும் என்று ரஜினி ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : ’எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் முடிவை சொல்றேன்’ – ரஜினிகாந்த்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

சென்னை போயஸ் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தோம் என்று கூறிய அவர் கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்று கூறினார். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சுற்றுப்பயணம் செய்வது ஆபத்து என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என்று களம் இறங்கியுள்ளேன்.

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது, மாற்றுவோம் அனைத்தையும் மாற்றுவோம் என்று கூறிய அவர், அண்ணாத்த பட காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் முழு மூச்சுடன் கட்சி பணிகள் தொடரும் என்று கூறிய அவர் கொடுத்த வாக்கில் இருந்து மாறமாட்டேன் என்று கூறியுள்ளார்.  ரஜினியின் அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூண மூர்த்தியும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Election rajinikanth will launch the party on january

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X