சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து வியாழக்கிழமை அன்று ஆய்வு செய்தார் முதல்வர். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் திமுக தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தம் மீது தெரிவிப்பதாக கூறினார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மிகப் பெரிய ஊழல். தமிழ்நாட்டின் பட்ஜெட் அளவுக்கு பெரியது.
ரூ.1.76 ஆயிரம் அளவில் கொள்ளையடித்த கட்சி தி.மு.க. அவர்கள் காங்கிரஸ் கூட்டணியில் ரூ. 1.76 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்தார்கள். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்த போது இந்த ஊழல் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியே இதில் நடவடிக்கை எடுத்தது. இவர்கள் தற்போது அ.தி.மு.க அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள் என்றார்.
இந்த பேச்சை தொடர்ந்து நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா, ஊழல் குற்றச்சாட்டில் திமுகவில் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்று கூறினார். முதல்வர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல. திமுக விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனில் குறிப்பிட்டிருப்பதாக அவரது கட்சியினர் திமுக மீது குற்றம் சுமத்துகின்றனர்.
மேலும் படிக்க : தமிழகத்தை பொறுத்தவரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் எத்தகையது?
ஆனால் 2 ஜி உட்பட ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் என்றால் நாளையோ, நாளை மறுநாளோ கோட்டையில், எல்லா ஊடகங்கள் முன்னிலையில், 2ஜி, சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்க அவர் தயாரா? என்றார் கேள்வி எழுப்பினார். மேலும் ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன என்பதை விவாதிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பினார் ஆ.ராசா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil