கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள மகளிர் நியாய விலை கடையை ஆறு யானை கொண்ட கும்பல் உடைத்து சேதப்படுத்தியது.
இன்று அதிகாலை ஐந்து மணி அளவில் ஆறு யானை கொண்ட கும்பல் அப்பகுதியில் இயங்கி வரும் மல்லிகை மகளிர் நியாய விலை கடையை உடைத்து அதில் உள்ள சுமார் 10"க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை இழுத்து துவம்சம் செய்து சேதப்படுத்தியது .இதில் மேல்கூரை மற்றும் கட்டிடங்கள் உடைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ‘நாய் மண்டையில் ஒரே போடு..!’ ஹெச். ராஜா மீது நடவடிக்கையா? விலங்குகள் நல வாரியம் அதிரடி உத்தரவு
இதன் சத்தம் கேட்டு அருகாமையில் உள்ள பொதுமக்கள் கூச்சலிட்டு அதனை விரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதனை அறிந்த வால்பாறை வட்டாட்சியர் செந்தில் குமார், வட்ட வழங்க அலுவலர் சுந்தர்ராஜன் அப்பகுதியில் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர், உடனடியாக நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையை அங்குள்ள குழந்தைகள் காப்பக அறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தற்போது இன்றும் அங்கு முகாமிட்டுள்ள காட்டு யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil