scorecardresearch

ஓ.பி.எஸ்-க்கு ஈரோடு கிழக்கில் என்ன வேலை? நத்தம் விஸ்வநாதன் கேள்வி

எத்தனை பேர் முகாமிட்டு இருந்தாலும் இரட்டை இலை வெற்றி பெறுவது உறுதி. நாளை நடைபெறும் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தோழமைக் கட்சிகள் அனைவரும் கலந்துக் கொள்கின்றனர் – நத்தம் விஸ்வநாதன்

ஓ.பி.எஸ்-க்கு ஈரோடு கிழக்கில் என்ன வேலை? நத்தம் விஸ்வநாதன் கேள்வி
நத்தம் விஸ்வநாதன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம்

இரட்டை இலைக்கு ஆதரவாக ஓட்டு கேட்போம் என ஓ.பி.எஸ் தரப்பில் கூறியுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு என்ன வேலை என இ.பி.எஸ் ஆதரவாளர் நத்தம் விஸ்வதான் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களமிறங்கிறார். அதேநேரம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் கடந்து அ.தி.மு.க சார்பாக இரட்டை இலை சின்னத்தில் இ.பி.எஸ் தரப்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இதுதவிர நாம் தமிழர் மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகளும் போட்டியில் உள்ளன.

இதையும் படியுங்கள்: ஈரோடு கிழக்கில் பணப் புழக்கத்தை கண்காணிக்க ஏற்பாடு: புகார் தெரிவிக்க ஐ.டி சார்பில் வாட்ஸ் அப் எண் அறிவிப்பு

இ.பி.எஸ் தரப்பு வேட்பாளரை அறிவிக்கும் முன் வேட்பாளரை அறிவித்து, வேட்பு மனுதாக்கல் செய்ய வைத்த ஓ.பி.எஸ், இரட்டை இலை சின்னம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவால், போட்டியிலிருந்து பின்வாங்கினார். மேலும் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உச்ச நீதிமன்ற உத்தரவால், இரட்டை இலை சின்னம் கிடைத்த மகிழ்ச்சியில் இ.பி.எஸ் தரப்பு மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஈரோட்டில் உள்ள தனியார் விடுதியில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். பிற்பகலில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம், ஐ.டி அதிகாரிகள் முகாமிட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எத்தனை பேர் முகாமிட்டு இருந்தாலும் இரட்டை இலை வெற்றி பெறுவது உறுதி. நாளை நடைபெறும் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தோழமைக் கட்சிகள் அனைவரும் கலந்துக் கொள்கின்றனர் என்றார். அப்போது ஓ.பி.எஸ் கலந்துக் கொள்கிறாரா என்று கேட்டதற்கு, அவருக்கு இங்க என்ன வேலை என்று கூறினார். பின்னர் பா.ஜ.க கலந்துக் கொள்ளுமா என்று கேட்டதற்கு கண்டிப்பாக கலந்துக் கொள்ளும் என்று கூறினார்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் முனுசாமியிடம் கேட்டதற்கு, கூட்டணிக் கட்சிகள் அனைவரும் கலந்துக் கொள்கிறார்கள் என்றார். ஓ.பி.எஸ் குறித்த கேள்விக்கு கூட்டணி கட்சியினர் கலந்துக் கொள்வார்கள் என்று சொல்லிவிட்டேன் என்று கூறியவாறே கிளம்பினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Eps supporter natham viswanathan says ops has no work in erode by poll

Best of Express