Fani cyclone live updates : தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நீர் ஆதாரங்கள் வற்றி வரும் நிலையில் மழை இல்லாததால் தமிழகத்தின் பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
இதனால் தமிழக மக்கள் மழை எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான ஃபனி புயல் கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 3-ம்தேதி இந்தப் புயல் ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபனி புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இருக்காது என கூறப்படும் நிலையில், மழைக்கான சாத்தியக் கூறுகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மிகப்பெரும் புயலான ஃபனி, ரேடார் கருவியின் எல்லைக்குள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. அதன் இருப்பிடத்ததை பொருத்தளவில் அட்ச ரேகை 84.5 E- ல் உள்ளதுடன், சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அட்ச ரேகை 82.5 E-க்குள் வந்தால் நமக்கு நல்ல மழை கிடைக்கும்.
வட தமிழக்ததின் உட்பகுதியில் இன்றிரவும், அதிர்ஷ்டம் இருந்தால் வட கடலோர பகுதியில் நாளையும் மழை பெய்யும். இந்த வார இறுதியில் இருந்து வெயில் கொளுத்த தொடங்கி விடும்.
Live Blog
Fani cyclone live updates : பொதுமக்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக வானிலை மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஃபனி புயல் குறித்த லேட்டஸ் தகவல்களை ஆங்கிலத்தில் வாசிக்க English
ஃபனி புயல் சென்னையை விட்டு விலகிச் செல்கிறது. இன்று முழுவதும் சென்னை மேகமூட்டமாக இருந்தாலும், வெப்பம் அதிகமாகவே இருந்தது.
அதேசமயம் தமிழகத்தின் இதர பல பகுதிகளில் காற்று வீசியது. நெல்லை மாவட்டம் பணகுடி, தெற்கு வள்ளியூர், கும்பிளம்பாடு, ரோஸ்மியாபுரம், வடக்கன்குளம், விசுவாசபுரம், உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்று காரணமாக சுமார் 1லட்சம் வாழைகள் சாய்ந்தன. தருமபுரி அருகே பலத்த சூறாவளி காற்று வீசியதில் வீடுகள் , மின்கம்பம், வாழைமரங்கள் சேதம் அடைந்தன.
மிகப்பெரும் புயலான ஃபனி, ரேடார் கருவியின் எல்லைக்குள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. அதன் இருப்பிடத்ததை பொருத்தளவில் அட்ச ரேகை 84.5 E- ல் உள்ளதுடன், சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் அட்ச ரேகை 82.5 E-க்குள் வந்தால் நமக்கு நல்ல மழை கிடைக்கும்.
வட தமிழக்ததின் உட்பகுதியில் இன்றிரவும், அதிர்ஷ்டம் இருந்தால் வட கடலோர பகுதியில் நாளையும் மழை பெய்யும். இந்த வார இறுதியில் இருந்து வெயில் கொளுத்த தொடங்கி விடும்.
மழை வந்தால் இன்றிரவு வரும். அல்லது நாளை வரலாம். இதை விட்டால் சென்னைக்கு ஃபனி புயலால் மழை கிடைக்க வாய்ப்பில்லை.
4 மாநிலங்களுக்கு ரூ.1,086 கோடியை நிவாரண நிதியாக முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்திற்கு ரூ.309.37 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.200.25 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.340.87 கோடியும், மேற்குவங்காளத்திற்கு ரூ.235.50 கோடியும் வழங்கப்படுகிறது.
ஃபனி புயலை எதிர்கொள்வது குறித்து தேசிய நெருக்கடிக்கால மேலாண்மைக் குழுவானது இரண்டவது நாளாக நேற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.10 லட்சம் மக்கள் வரை தங்கும் வகையிலான 879 முகாம்கள் ஒடிசாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை நடவடிக்கையாக கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆந்திரபிரதேசம், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் விமானப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
41 இடங்கள் பாதிப்பு மிகுந்த பகுதியாக இருக்கும் என தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஆந்திரவில் (8), ஒடிசா (28), மேற்குவங்கம் (5). இதன் காரணமாக 13 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மேற்குவங்கம் மற்றும் ஆந்திராவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க.. ஃபனி புயல் நகரும் பாதை முழு விவரம், 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி
புயல் கரையை கடக்கும் போது, தாழ்வுநிலை பகுதிகளான கஞ்சம், குர்தா, புரி, ஜகத்சிங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் எற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்கு வரும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஃபனி புயலால், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சில பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மே.3 ஆம் தேதி புயல் கரையை கடக்கும் போது, மேற்குவங்கத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் மற்றும் விஜயநகரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights