chennai weather condition : நாளை மறுநாள் ஒடிசாவில் கரையை கடக்கவுள்ள ஃபனி புயலானது உச்ச உயர தீவிர புயலாக உருவெடுத்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர்ன் புவியரசன் ஒடிசாவின் பூரி அருகே ஃபனி புயல் வரும் 3 ஆம் தேதி கரையை கடக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ உச்சஉயர் தீவிர புயலாக உள்ள ஃபனி புயல் சென்னையில் இருந்து 420 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாளை மறுநாள் ஒடிசாவின் பூரி அருகே ஃபானி புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயலின் வேகம் மணிக்கு 205 கி.மீ. வரை அதிகரிக்கும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது . மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.தமிழக கடலோர பகுதிகளில் 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேலும் படிக்க.. அதி தீவிரம் காட்டும் ஃபனி புயல்... 10 கோடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி !
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க.. அச்சுறுத்தும் ஃபனி..