Advertisment

Cyclone Fani, Weather forecast: புயல் கடக்கும் நேரம் அறிவிப்பு! அனைத்து வித நிறுவனங்களும் மூடல்! உச்சக்கட்ட உஷாரில் ஒடிசா

Cyclone Fani in Odisha, Andhra Pradesh, West Bengal: வெள்ளிக்கிழமை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Fani Odisha, Andhra Pradesh Live Update

Cyclone Fani Odisha, Andhra Pradesh Live Update

Cyclone Fani Update in Odisha, Andhra Pradesh: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல் வடமேற்கு திசையில் பயணித்து ஒடிசா மாநிலம் புரி நகரை ஒட்டி நாளை மாலை 5 மணியளவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

புயல் கரையை கடக்கும் போது கனமழையும் 180 கிலோ மீட்டர் முதல் 200 கிலோ மீட்டர் வரை சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று ஆலோசனை நடத்தினார்.

Cyclone Fani Live: Weather Forecast:

மேலும் வாசிக்க..ஃபனி புயல் பாதிப்பை தவிர்க்க 14 குழுக்கள் தயார்

கடலோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 8 லட்சம் பேரை இன்று மாலைக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புரி, பலாசூர், கஞ்சம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், நிவாரண முகாம்கள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Live Blog

chennai weather forecast:புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு பிராந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஃபனி புயல் குறித்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க..English














Highlights

    19:46 (IST)02 May 2019

    பாதுகாப்பான இடங்களில் மக்கள்

    புயலால் பாதிக்கப்படும் இடங்களை முன்பே கண்டறிந்து அங்கிருந்த பொதுமக்களை அரசு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளது.

    18:52 (IST)02 May 2019

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதி

    ஃபனி புயல் நாளை(மே.3) ஓடிசாவில் கரையை கடக்கவிருக்கும் நிலையில், அங்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதி.

    18:40 (IST)02 May 2019

    புயல் கடக்கும் நேரம்

    ஒடிசாவில் நாளை பகல் 12 மணி முதல் 2 மணிக்குள் ஃபனி புயல் கரையை கடக்க உள்ளதாக அம்மாநில அரசு தகவல்

    இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

    18:11 (IST)02 May 2019

    கடலில் இறங்க தடை

    ஃபனி புயல் எதிரொலி : கடலூர் சில்வர் பீச்சில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், பொதுமக்கள் கடலில் இறங்க போலீசார் தடை விதிப்பு.

    சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது.

    17:16 (IST)02 May 2019

    பிரதமர் மோடி ஆலோசனை

    16:56 (IST)02 May 2019

    மத்திய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்

    ஃபானி புயல் கரையை கடக்கவுள்ள மாநிலங்களில் மத்திய அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்; நிவாரணம், மீட்பு பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி 

    16:02 (IST)02 May 2019

    chennai weather : காசிமேட்டில் கடல் சீற்றம்!

    காசிமேட்டில் கடல் சீற்றம்

    15:59 (IST)02 May 2019

    மெரினாவில் கடல் கொந்தளிப்பு!

    மெரினாவில் கடல் கொந்தளிப்பு

    15:57 (IST)02 May 2019

    cyclone fani effect : மெரினாவில் கடல் சீற்றம்!

    ஒடிசாவில் கரையை கடக்க இருக்கும் ஃபனி புயலின் தாக்கம் இன்று மெரினாவில் இருந்தது. வழக்கத்தை விட கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. 

    மெரினாவில் கடல் சீற்றம்

    15:45 (IST)02 May 2019

    Fani cyclone updates : மோடி தலைமையில் உயர்மட்டக்குழு!

    ஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர்,பிரதமரின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், வானிலை மைய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

    15:13 (IST)02 May 2019

    Cyclone fani alert : கனமழை எச்சரிக்கை!

    ஃபனி புயலானது கரையைக் கடக்கும் போது  ஆந்திரா கடலோர பகுதிகளான விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

    14:34 (IST)02 May 2019

    tamilnadu rainfall : மழைக்கு வாய்ப்பு!

    தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  என இந்திய  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    13:36 (IST)02 May 2019

    fani cyclone : இந்திய விமான நிலைய ஆணையம்!

    ஃபனி புயல்  நாளை கரையை கடக்கவுள்ள நிலையில்   கடலோர விமான நிலையங்கள் தயார் நிலையில் இருக்க இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவு. 

    13:11 (IST)02 May 2019

    Fani cyclone latest : தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள ஃபனி!

    ஃபனி புயலானது ஒடிசாவின் பூரி நகரில் இருந்து 450 கி. மீ  தொலைவில் தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இது நாளை மதியம் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    11:53 (IST)02 May 2019

    Cyclone fani : ரயில்கள் ரத்து!

    ஃபனி புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரா, ஒடிசா வழியாக செல்லும் 12  ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் யஷ்வந்த்பூர் - முசாபர்பூர், சந்திரகாசி, ஹல்டியா, சாலிமர், ஹவுரா ஆகிய விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    11:46 (IST)02 May 2019

    Fani cyclone updates : நிவாரண முகாம்கள்!

    ஒடிசாவில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 879 புயல் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    11:03 (IST)02 May 2019

    Fani update : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

    ஒடிசாவில் மே 4 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.  

    10:43 (IST)02 May 2019

    Fani crossing : மக்கள் வெளியேற்றம்!

    ஃபனி புயல் ஒடிசாவை நெருங்கி வருவதால் இன்று (மே 02) மாலைக்குள் கடலோர பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் 8 லட்சம் மக்களை அங்கிருந்து வெளியேற்ற ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.

    10:38 (IST)02 May 2019

    Rain fall report : மழைக்கு வாய்ப்பு!

    ஃபனி புயல் கரையை கடக்கும் நேரத்தில் ஆந்திர பிரதேசம், ஒடிசா,  மேற்கு வங்காளம்,  அருணாச்சலபிரதேசம், அசாம், மேகாலய போன்ற மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

    09:52 (IST)02 May 2019

    Tamilnadu weather man : தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

    ஃபனி புயல் கரையை நெருங்க உள்ளதால், தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கும். பல இடங்களில் வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று கூறியுள்ளார். 

    09:10 (IST)02 May 2019

    Cylone fani condition : ரயில் சேவைகள் நிறுத்தம்!

    ஃபனி புயல் காரணமாக கிழக்குக் கடலோரப் பகுதிகள் வழியாக இயக்கப்படும் 103 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    08:52 (IST)02 May 2019

    Cyclone Fani updates : கடலூரில் ஃபனி ஆட்டம்!

    கடலூரில் கடும் சூறாவளி வீசியதை அடுத்து இடி, மின்னலுடன் பலத்த மழை   பெய்து வருகிறது . மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு

    08:47 (IST)02 May 2019

    Fani cyclone : அதிதீவிர புயலாக ஃபனி!

    வடமேற்கு திசையில் மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில்  ஃபனி புயலானது நகர்ந்துக் கொண்டிருக்கிறது. 

    Fani cyclone weather forecast: ஃபனி புயல் ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து தெற்கு, தென்மேற்கு திசையில் 730 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும் இது, மூன்றாம் தேதி பிற்பகலில் பூரி அருகே கரையை கடக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    Fani cyclone weather forecast
    Fani cyclone weather forecast : அதி தீவிர புயலாக ஃபனி

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், ஃபனி புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாகவும், இது சென்னையில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.

    மேலும் படிக்க... தமிழகத்தில் பரவலாக மழை... வெப்பத்தை தணித்ததால், மக்கள் மகிழ்ச்சி!

    விசாகப்பட்டினத்தில் போர்க்கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்கள் உடனடியாக கொண்டு செல்லப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபானி புயல் எதிரொலியாக ஒடிசா, மேற்குவங்கம், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் கடலோர பகுதிகளில் 47 மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    Tamilnadu Weather Rain In Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment