Weather In Chennai And Fani Cyclone Update: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஃபனி புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். பலத்த காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று (ஏப்ரல் 30) பிற்பகலில் அளித்த பேட்டி வருமாறு:
‘ஃபனி புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்று,
வங்கக் கடலில் சென்னைக்கு தென் கிழக்கே 570 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது வட மேற்காக நகர்ந்து வருகிறது. நாளை (மே 1) மாலை வரை இது வட மேற்காக நகர்ந்து, பின்னர் வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் ஒடிஸா கடற்கரையை நோக்கிச் செல்லும்.
cyclone fani latest news: சென்னை வானிலை ஆய்வு மையம்
Chennai Weather And Cyclone Fani Latest News: தமிழ்நாடு வானிலை அறிக்கை
பலத்த காற்றைப் பொறுத்தவரை குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும். மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை, சில சமயங்களில் 50 கிமீ வரை வீசக்கூடும். மீனவர்கள் இன்று (30-ம் தேதி) தென் மேற்கு வங்கக் கடல், நாளை (1-ம் தேதி) தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடல் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மே 2-ம் தேதி வரை கொந்தளிப்பாக காணப்படும்.
Read More: Cyclone Fani Live Updates : ஜில்லென குளிர்ந்த மதுரை, சேலம், ஊட்டி
வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். 3-ம் தேதி ஃபனி புயல் ஒடிஸாவில் கரையைக் கடக்கக்கூடும்.’ என்றார் பாலச்சந்திரன்.
Read More: "கடும் வெப்பம் கொளுத்தப் போகிறது"! - மாவட்டம் வாரியாக லிஸ்ட் போட்டு எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்
வெப்ப நிலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறித்து கேட்டபோது, ‘புயல் கடந்த பிறகுதான் அது பற்றி பார்க்க வேண்டும்’ என்றார்.