கஜ புயல் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயம் : கஜ புயலின் தாக்கத்தால் டெல்டா பகுதிகளும், கடலோரப் பகுதிகளும் பெரும் சேதாரத்தை சந்தித்திருக்கிறது. விவசாய நிலங்கள், தோப்புகள், மரங்கள் என எதையும் விட்டுவைக்காமல் சூரையாடிவிட்டுச் சென்றுள்ளது கஜ. புயலின் தாக்கத்தில் இருந்து மீள்வது ஒரு வலி என்றால், பெற்ற பிள்ளையைப் போல் வளர்த்த தென்னந்தோப்புகளை மீட்டெடுப்பது பெரும் சவால்களாக இருக்கிறது.
தென்னை மரங்களை நட்டு, ஆளாக்கி அதில் இருந்து லாபம் பார்ப்பதற்கு எப்படியும் குறைந்தது பத்து வருடங்களாவது ஆகும். ஒரு சில விவசாயிகள் மனம் உவண்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் டெல்டா பகுதியில் நிகழ்ந்தது.
மேலும் படிக்க : தென்னந்தோப்புகள் சேதாரமடைந்ததை கண்டு தற்கொலை செய்து கொண்ட விவசாயி
கஜ புயல் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயம் : அறிவுரை கேட்டு தோப்பை காப்பாற்றிய விவசாயி
இந்நிலையில், வானிலையை தெளிவாக முன் கூட்டியே கணித்து சொல்லும் ஆசிரியரின் அறிவுரையைக் கேட்டு தன் தோப்பில் இருந்த மரங்கள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறார் விவசாயி ஒருவர். திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அருகே இருக்கும் இடும்பாவனம் என்ற பகுதியில் சீனு என்ற விவசாயி வசித்து வருகிறார். அப்பகுதியில் அவருக்கு தென்னந்தோப்பும் அதில் 250 தென்னைகளும் சொந்தமாய் இருக்கின்றன.
வேதாரண்யத்தை புயல் தாக்கும் என்ற செய்தியை ஆசிரியர் செல்வகுமார் கணித்து சொல்லியதும் “தோப்பில் இருந்த தென்னை மரங்களின் குருத்து, இளநீர், மற்றும் தேங்காய்களை முன்கூட்டியே மரத்தில் இருந்து இறக்கிவிட்டார். பின்னர் பச்சை மட்டைகளை எல்லாம் வெட்டி எடுத்துவிட்டார். மரத்தின் தலைப்பகுதியில் இருக்கும் கனத்தினை குறைத்துவிட்டால், புயல் காலங்களில் மரம் முறிந்து விழுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால் இந்த முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் சீனு.
கஜ புயலின் போது டெல்டா பகுதிகளில் இருக்கும் அனைத்து தென்னந்தோப்புகளும் பாதிப்படைந்துவிட்டது. ஆனால் சீனுவின் தோப்பில் வெறும் 50 மரங்கள் மட்டுமே சேதாரத்தை சந்தித்திருக்கிறது. மற்ற விவசாயிகள் கண்டிருக்கும் பெரும் சேதாரத்தினை முன்யோசனையால் தவிர்த்திருக்கிறார் சீனு. தன்னுடைய தோப்பில் இருக்கும் பச்சை மட்டைகள், குறுத்துகள், இளநீர், மற்றும் தேங்காய்களை வெட்ட வெறும் 15,000 மட்டுமே செலவு செய்திருக்கிறார் சீனு.
மேலும் படிக்க : 15 நாட்களுக்கு முன்பே கஜ புயல் வருவதை கண்டுபிடித்த ஆசிரியர்