Fellow cops donated Rs 86.5 lakh to cop subramaniyan's family members : தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மணக்கரையில் கொலை வழக்கில் தொடர்பு கொண்ட துரைமுத்து மற்றும் அவரின் கூட்டாளிகள் காடுகளில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. காவல்துறையினர் அவர்களை கைது செய்ய சென்ற இடத்தில் அவர்கள் வெடிகுண்டு வீசி பதில் தாக்குதல் நடத்தினார்கள். அதில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் வீர மரணம் அடைந்தார்.
சுப்பிரமணியனின் வீட்டிற்கு அவர்களின் உறவினர்களை காண சென்ற தென் மண்டல ஐ.ஜி. முருகன், ரூ. 86.5 லட்சம் பணத்தை தனியார் வங்கி ஒன்றில் வைப்பு நிதியாக வைக்கப்பட்ட ரசீதை வழங்கினார். மரணமடைந்த காவலருக்கு காவல்துறை பங்களிப்பாக இந்த நிதியை வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க : பத்து ரூவாய்க்கு நாலு இட்லி ; சேலத்தில் ஃபேமஸாகும் மோடி இட்லி!
சுப்பிரமணியன் இரண்டாம் நிலைக் காவலர் என்ற அடிப்படையில் அவருக்கு மாத ஊதியமாக ரூ. 22,000 வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வைப்பு நிதியில் இருந்து அவரின் குடும்பத்திற்கு மாதம் 42,000 வட்டி கிடைக்கும். தென் மண்டலத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து காவலர்களின் சார்பில் ரூ. 86.5 லட்சம் நிதி திரட்டப்பட்டது என்று அவர் அறிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
முதல்வர் பழனிசாமி ஏற்கனவே இவரின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதி உதவியும், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.