கேரளத்தின் களமச்சேரியில் யெகோவா விட்னெஸ்னஸ் கிறிஸ்தவ வழிபாடு தலம் அமைந்துள்ளது. இதில், இன்று (அக்.29) காலை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இதில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். 25க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். இந்த நிலையில் மாநிலம் முழுக்க உஷார்படுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட வழிபாட்டு மையத்தில் என்.ஐ.ஏ மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : கேரளா: கிறிஸ்தவ கூட்டரங்களில் குண்டுவெடிப்பு; பெண் உயிரிழப்பு, 25 பேர் காயம்
மேலும் அமைச்சர் ராஜிவ் மற்றும் வீணா ஜார்ஜ் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்க ஆறுதல் கூறினார்கள். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். அதில், “தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் போலீசாருடன் வன அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். கோவையில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“