கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் உள்ள யெகோவா விட்னஸ் ஸம்ரா கிறிஸ்தவ கூட்டரங்கில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டிருந்தது.
அப்போது பலத்த சப்தத்துடன் தொடர்ச்சியாக 3 குண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்தன.
தொடர்ந்து, அந்த இடமே சிதறி தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி வயதான பெண் ஒருவர் கூறுகையில், “ஒன்றன்பின் ஒன்றாக மூன்று குண்டுகள் வரை வெடித்த சப்தம் கேட்டது” என்றார்.
இந்த நிலையில், சம்பவ பகுதியில் தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் இன்று (அக்.29) காலை 9.30 மணிக்கு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் பி ராஜிவ் உறுதியளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆறுதல் கூறினார்.
சசி தரூர் அதிர்ச்சி
இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள காங்கிரஸ் திருவனந்தபுரம் மக்களவை எம்.பி. சசி தரூர் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கேரள களமச்சேரி குண்டுவெடிப்பு, திட்டமிட்ட செயல்: தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அதிகாரிகள் தகவல்
இந்தக் குண்டுவெடிப்பை தொடர்ந்து, கொச்சியின் களமசேரியில் உள்ள யெகோவா தேவாலயத்திற்கு பயங்கரவாத எதிர்ப்புப் படைகள் மற்றும் தேசிய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தபோது தேவாலயத்தில் 2500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க : கேரளத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணி: வீடியோ காலில் பேசிய ஹமாஸ் முன்னாள் தலைவர்!
இந்த குண்டு வெடிப்பில் 2 பெண்கள்உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழ்துள்ளார். 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குண்டுவைத்தது நான்தான் என யகோவா சபையில் முன்னாள் உறுப்பினர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவர்பெயர் டொமினிக் மார்டின் ஆகும். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Kochi convention centre blast: 1 killed, dozens injured in blasts during prayer meet; Shah calls for NIA, NSG probe
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“