கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் உள்ள யெகோவா சாட்சியங்கள் கிறிஸ்தவ மத ஆராதனை கூடத்தில் இன்று காலை பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது தொடர்ச்சியாக 3 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன. இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். பெண் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த மாநில முதல் அமைச்சர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நிலைமை குறித்து ஆராய அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதையும் படிங்க : கேரள களமச்சேரி குண்டுவெடிப்பு, திட்டமிட்ட செயல்: தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அதிகாரிகள் தகவல்
முதல்கட்ட போலீஸ் விசாரணையில் வெடித்தது ஐஇடி ரக வெடிகுண்டு எனவும், வயர் மற்றும் சூட்கேஸ் உள்ளிட்ட பொருள்களின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனப் போலீசார் தெரிவித்தனர்.
தற்போது சம்பந்தப்பட்ட மத ஆராதனை கூட்டரங்கில் என்ஐஏ மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் இச்சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக திருவனந்தபுரம் எம்.பி.யும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : கேரளா: கிறிஸ்தவ கூட்டரங்களில் குண்டுவெடிப்பு; பெண் உயிரிழப்பு, 25 பேர் காயம்
இந்த நிலையில் களமச்சேரி வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கோடக்கரை காவல் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்ற நபர் சரணடைந்துள்ளதாக ஏடிஜிபி அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் யெகோவா சாட்சியங்கள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்ற தகவலையும் தெரிவித்தார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“