Advertisment

குப்பை அள்ளும் வண்டிகளில் தான் உணவு, வேலைக்கு செல்வது எல்லாம்! தூய்மை பணியாளர்களின் துயரம்

எதிர்காலங்களில் இவர்களின் வேலை, வாழ்வு முறைகளில் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் சட்டங்கள் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
Apr 15, 2020 13:42 IST
Food packets stored in Garbage truck and provided to the clean workers

Food packets stored in Garbage truck and provided to the clean workers

Food packets stored in Garbage truck and provided to the clean workers   : கொரோனா வைரஸ் தீவிரம் என்ற பதத்தை நாம் பயன்படுத்துவதற்கு முன்பே சுதாகரித்து கொண்டவர்கள் தூய்மை பணியாளர்கள் தான். நாம் ஆரோக்கியமாக, சுகாதாரமாக இருக்க அவர்கள் தினமும் மணிக்கணக்காக பணியாற்றி வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே காலை முதல் இரவு வரை கடுமையாக, இந்த வெய்யிலையும் பொருட்படுத்தாமல் உழைத்து வருபவர்கள் துப்புரவு பணியாளரள், ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குப்பை அள்ளும் வண்டியில் எடுத்துக் கொண்டு வந்து தரப்பட்டது.

Advertisment

மேலும் படிக்க : வசதி படைத்தோர்களிடம் திருடி ஏழைகளுக்கு தரும் இத்தாலி கேங்க்ஸ்டர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் நகராட்சியில் தூய்மை பணியாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோவை கூட எடுக்காமல், குப்பைகளை எடுத்துச் செல்லும் வண்டிகளில் ஏற்றி வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த இரண்டு செய்திகளும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மேலும் படிக்க : குணமடையும் நெல்லை : ஒரே நாளில் 13 நபர்கள் கொரோனாவில் இருந்து நலம்!

கிருமிநாசினி தெளிப்பது, பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருக்கும் பகுதிகளில் அதிக அக்கறையுடன் செயல்படுவது, வீடு வீடாக சென்று குப்பைகளை அகற்றும் பணி முதற்கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது வரை இவர்களின் செயல்கள் பாராட்டுதலுக்கு உரியது. ஆனால் நாம் இவர்களுக்கு பதிலுக்கு என்ன செய்தோம் என்றால் கை தட்டினோம். மாடிகளில் விளக்கேற்றினோம். கைத்தட்டி ஆரவாரம் செய்தது இருக்கட்டும்... ஆனால் இது தான் நீங்கள் காட்டும் நன்றியா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த கொரோனா நிலை முடிந்தவுடன் தூய்மை பணியார்களின் வேலை மற்றும் வாழ்வு முறைகளில் மாற்றங்களை கொண்டு வரும் வகையில் சட்டங்கள் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment