/tamil-ie/media/media_files/uploads/2018/02/Jayalalitha.jpg)
Former chief minister Jayalalitha memorial place constructions work
Former chief minister Jayalalitha memorial place constructions work : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணத்தை தழுவினார். அவருடைய நல்லுடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே புதைக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கான நினைவிடம் விரைவாக கட்டி எழுப்பப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆரின் நினைவிடத்தையும் மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
புதுப்பொலிவுடன் அமைய இருக்கும் இந்த நினைவிடங்களை காண்பதற்காக அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர். இந்த பிரம்மாண்ட நினைவிடத்தை கட்டியெழுப்ப தமிழக அரசு ரூ. 58 கோடியை நிதியாக ஒதுக்கியுள்ளது.
சர்வதேச தரத்தில் கட்டியெழுப்பப்படும் இந்த நினைவிடத்தை சென்னை ஐ.ஐ.டி. வல்லுநர்கள் வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். மரணித்தாலும் சாம்பலில் இருந்து மீண்டு வரும் ஃபீனிக்ஸ் பறவையை மனதில் கொண்டு ஜெவிற்கு நினைவிடம் கட்டப்பட்டுப்பட்டு வருவது அவருடைய வாழ்நாள் போராட்டங்களையும் வெற்றிகளையும் குறிப்பிடுவதாய் அமைந்திருக்கிறது.
இந்த கட்டிடப் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னர் பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித்துறை கட்டுமானப் பணிகளை விரைவில் முடித்துவிட்டால் இதர பணிகள் ஜனவரி மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.
மேலும் படிக்க : ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் மீதான தடை வழக்கு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.