மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை கைது செய்த முன்னாள் தமிழக டிஜிபி மரணம்...

இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த போது இவரை புலனாய்வுத்துறை இயக்குநராக பணியில் நியமிக்க முடிவு செய்தார்.

Former Tamil Nadu DGP VR Lakshminarayanan Passed Away : 91 வயதாகும் தமிழ்நாடு முன்னாள் டி.ஜி.பி. வி.ஆர்.லட்சுமி நாராயணன் அதிகாலை மரணமடைந்தார். 1945ம் ஆண்டு சென்னை க்றிஸ்டின் கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். 1951ம் ஆண்டு சிவில் சர்வீஸ் எழுதிய பேட்ச்சை சேர்ந்தவர் இவர். தன்னுடைய போலீஸ் பணியை மதுரையில், ஏ.எஸ்.பி.யாக துவங்கியவர்.

இந்திரா காந்தியை கைது செய்தவர்

பின்பு மத்திய புலனாய்வுத்துறையின் இணை இயக்குநராக செயல்பட்டார் லட்சுமி நாராயணன். எமெர்ஜென்ஸி காலம் முடிவுக்கு வந்த பிறகு, மொரார்ஜி தேசாய் ஆட்சியின் கீழ் இந்திரா காந்தியை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கைது செய்தார் லட்சுமி நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திராவின் வீட்டிற்கு சென்ற லட்சுமி நாராயணன், ராஜிவ் காந்தியிடம் உங்கள் தாயாரை நீங்களே சரணடைச் சொல்லுங்கள். என்னால் ஒரு காவல்துறை அதிகாரி போன்று நேருவின் வாரிசையும், இந்தியாவின் முன்னாள் பிரதமரையும் கைது செய்ய இயலாது என்று கூறினார்.

சரணடைந்த இந்திரா அவரிடம், உங்களின் கைவிலங்குகள் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவரோ நான் உங்களுக்கு கீழ் விசுவாசமாக கடமையாற்றியுள்ளேன். உங்கள் கைகளால் இரண்டு முறை மெடல்கள் வாங்கியுள்ளேன் என்று கூறிய அவர், கை விலங்குகளை எடுத்துவர மறந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வந்த போது இவரை புலனாய்வுத்துறை இயக்குநராக பணியில் நியமிக்க முடிவு செய்தார். ஆனால் அன்று தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். லட்சுமி நாராயணனை தமிழகத்தின் டி.ஜி.பியாக அறிவித்து அவரை தமிழகத்திற்கு திருப்பி பெற்றுக் கொண்டார்.

1985ல் பணி ஓய்வு பெற்றார். இவருடைய சகோதரர் புகழ்பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு சுரேஷ் என்ற மகனும், உஷா ரவி மற்றும் சீதா என்ற மகள்களும் உள்ளனர். செவ்வாய் கிழமை காலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close