fraud loan personas :லோன் வாங்கி தருவதாக கூறி நூதன முறையில் பொதுமக்களிடம் காசு பறித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் முக்கியமான 3 பேரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
வங்கியில் லோன் பெறுவது என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக மிக சுலபம். நீங்கள் நேராகவோ அல்லது உங்கள் தொலைப்பேசி மூலமாகவோ உங்களால் வங்கியில் லோன் பெற முடியுமா? முடியாதா? அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். ஆனாலும் சிலர் இதுப்போன்ற மோசடி கும்பலிடம் ஏமாறுவது வாடிக்கையாகி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.
அப்படி லோன் தேவை இருப்பவர்கள் தான் இந்த கும்பலின் டார்க்கெட். கம்மியான வட்டியில் லோன் வாங்கி தருவதாக மக்களை நம்ப வைத்து, அவர்களிடம் இதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என்று கூறி 10,000 முதல் 50,000 வரை பணம் பறித்து வந்துள்ளது இந்த நூதன மோசடி கும்பல்.
பல மாதங்களாக கைவரிசை காட்டி வந்த இவர்கள் குறித்து பொதுமக்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் இது தொடர்பாக 365 புகார்கள் பெறப்பட்டு 26 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
5 வயது சிறுமிக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி: 5 லட்சம் திரட்டிய போலீஸார்!
இந்நிலையில், இந்த மோசடி கும்பலின் முக்கிய குற்றவாளிகளான தியாகராஜன் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் விழுப்புரத்தைச் சேர்ந்த மணிபாலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலின் தலைவனான
பள்ளிக்கரணை செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடி குழுவை கைது செய்ய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil