போலீஸ் தலைமை கான்ஸ்டபிள் மற்றும் அவர் பணிபுரியும் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் தனது அண்டை வீட்டின் ஐந்து வயது சிறுமியின் திறந்த இதய அறுவை சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் திரட்டியிருக்கிறார்கள். பல உயிருக்கு ஆபத்தான இதய நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஏழு மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு சனிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆம்பூரில் இளைஞர் தீக்குளிப்பு: 5 போலீசார் இடமாற்றம்
கவிஷ்கா என்ற அந்த சிறுமி, பிறக்கும் போது டெக்ஸ்ட்ரோ கார்டியா (இதயத்தின் அசாதாரண நிலை) உட்பட பல இதய நோய்களுடன் பிறந்தாள். அவரது தந்தை கார்த்திக் ஒரு மின்னணு கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். அவர்களது குடும்பம் கூடுவாஞ்சேரியில் வசித்து வந்தது. நந்தம்பாக்கம் காவல் நிலையத்தின் தலைமை கான்ஸ்டபிளும், எழுத்தாளருமான பி.செந்தில்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக்கின் அறிமுகம் கிடைத்தது.
கவிஷ்கா ஏற்கனவே மூன்று ஆஞ்சியோகிராம்களுக்கு உட்பட்டு வழக்கமான மருந்துகளின் கீழ் இருந்தபோது, சமீபத்தில் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு மற்றொரு ஆஞ்சியோகிராம் தேவை என்று கூறியிருக்கிறார்கள். "பூட்டுதலினால் கார்த்திக்கின் நிதி நிலை மோசமடைந்தது, எனவே அவர் தனது மகளின் சிகிச்சையை ஒத்திவைத்தார்" என்று செந்தில் கூறினார். நிலைமை பற்றி அறிந்த அந்த கான்ஸ்டபிள் ஆரம்பத்தில் ரூ .30,000 ஏற்பாடு செய்தார்.
ஆனால் கவிஷ்காவின் உடல்நிலை மோசமடைந்ததுடன், அடைப்பை அகற்ற உடனடியாக திறந்த இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“அறுவை சிகிச்சைக்கு ரூ 5 லட்சம் செலவாகும். ஆனால் கார்த்திக் உதவி பெற தயங்கினார், நிலைமை எவ்வளவு மோசமானது என்று சொல்லவில்லை. அண்டை வீட்டாரிடமிருந்து இந்த நிலை பற்றி நான் அறிந்தேன்” என்று கூறிய செந்தில் குமார், பின்னர் அவர் தனது நிலைய ஆய்வாளர் எம்.தங்கராஜை அவர் அணுகியிருக்கிறார். அவர் பணம் சேர்க்க முயன்றிருக்கிறார்.
அவர் நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டதோடு, நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள பணியாளர்களிடமிருந்து ஆரம்ப தொகையாக ரூ.45,000 வசூலித்திருக்கிறார். மீதமுள்ள தொகையை தனக்குத் தெரிந்தவர்களிடமிருந்து ஏற்பாடு செய்திருக்கிறாராம்.
"சரியான நேரத்தில் எங்களால் உதவி செய்து குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதைப் பார்த்து, மற்றவர்கள் முன் வந்து தேவைப்படுபவர்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார் ஆய்வாளர் தங்கராஜ்.
தாய்லாந்துக் காரங்க புத்திசாலிங்க… நீங்களும் உணவில் இதை ஏன் சேர்க்கக் கூடாது?!
கவிஷ்கா ஜூலை 1-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஏழு மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சனிக்கிழமை இரவு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”