Cyclone Gaja Alerts: கஜ புயல், இன்று இரவு தமிழகத்தில் கரையைக் கடக்கிறது. இந்தச் சூழலில் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பார்க்கலாம். குறிப்பாக செல்ஃபி பிரியர்கள் உஷார்!
1. உங்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, சான்றிதழ்கள் ஆகியவற்றை பத்திரப்படுத்தவும்.
2. ரேடியோ, டார்ச் லைட் போன்ற உபகரணங்களை உடன் எடுத்துக் கொள்ளவும்.
Read More: கஜ புயல் Live Updates
3. வெள்ளம் தொடர்பான வதந்திகளை நம்பாமல், ரேடியோ மற்றும் தொலைக்காட்சி மூலமாக அரசு விடுக்கும் எச்சரிக்கைகளை மட்டும் நம்பவும். மின்சாரம் இருக்கும் வரையில் மொபைல் போன்களை சார்ஜ் ஏற்றிக் கொள்ளவும். எஸ்.எம்.எஸ் பயன்படுத்தவும்.
4. வீட்டின் கேஸ் சிலிண்டர், மின் இணைப்புகள் முதலியவற்றை துண்டிக்கவும்.
5. பிஸ்கட், பிரட், குடிநீர் முதலியவற்றை எடுத்துக் கொள்ளவும். வீட்டில் வளர்க்கும் கால்நடைகளை பத்திரப்படுத்தவும்.
Gaja Cyclone, Tamil Nadu Alerts: கஜ புயல் - தமிழ்நாடு அரசு தயார் நிலை
6. உங்கள் வீடு பாதுகாப்பாக இருந்தால், வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளைத் தாழிட்டு விட்டு, பாதுகாப்பாக இருக்கவும்.
7. உங்கள் வீடு பாதுகாப்பாக இல்லாத பட்சத்தில், ஊரின் மேடான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு புயல் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக இருக்கவும்.
Read More: நல்லா கவனிங்க... கஜ புயல் வரும்போது இதையெல்லாம் நீங்க செய்யவே கூடாது
8. இடியும் நிலையில் உள்ள பழைய கட்டிடங்கள் அருகிலும், மரங்கள் மின்கம்பங்கள் அருகிலும் இருக்க வேண்டாம். மொட்டை மாடியில் நின்றுகொண்டு புயலை ரசிப்பதோ, செல்பி எடுப்பதோ கூடாது.
9. புயல் கரையை கடந்து விட்டதாக அரசு அறிவித்த பின்பு பாதுகாப்பு மையத்தை விட்டு வெளியேறவும். மின்சார கம்பிகள் துண்டித்து சாலையில் கிடக்கலாம் என்பதால், எச்சரிக்கையுடன் பயணிக்கவும்.
Read More: கஜ புயல் எதிரொலி : எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டது?
10. கஜா புயலை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். "கடலோர மாவட்டங்களில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக 2,559 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. 410 பல்துறை அலுவலர்கள் கொண்ட மண்டல குழுக்கள், இப்பகுதிகளில் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 4500 ஜே.சி.பி. இயந்திரங்களுடன், முதல்நிலை மீட்பாளர்கள் 22,495 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
கஜ புயல் செல்லும் பாதை: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்
காவல், தீயணைப்பு துறை யினரும், தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் உதவிப் படையினரும் தயார்நிலையில் உள்ளனர். புயல் கரையைக் கடந் ததும், குப்பைகளை உடனே அகற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேத மடையும் மரங்களும் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படும். ஆகவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Gaja Cyclone Hits Nagapattinam, Tamli Nadu- Alerts: கஜ புயல், நாகப்பட்டினத்தில் கரையை கடக்கிறது. முன் எச்சரிக்கை டிப்ஸ் இவை!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.