Advertisment

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை... புதிய பாடப் புத்தகங்கள்! 'கஜா' மீட்புப் பணிகள் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கஜா நிவாரண நிதி

கஜா நிவாரண நிதி

முதல்வர் பழனிசாமி - "கஜா புயல் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன; நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாளை மறுநாள் சென்று பார்வையிட உள்ளேன்".

Advertisment

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் - "புயல் பாதித்த பகுதிகளில் ஓரிரு நாட்களில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. சேத விவரங்களை கணக்கிட்டு மத்திய அரசிடம் நிதி கேட்கப்படும். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 216 ரேஷன் கடைகளில், காலை முதல் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது".

மின் வாரியம் - கஜா புயலால் சேதமடைந்த மின்கம்பங்கள் 39,938, மின்மாற்றிகள் 347ஆக அதிகரிப்பு; மின்சீரமைப்பு பணிகளுக்காக கூடுதலாக 1,000 பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை இயக்க போதிய பெட்ரோல், டீசல் இல்லாததால் தேவையான பெட்ரோல், டீசல் அனுப்ப இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கஜா புயலால் உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ.30,000 இழப்பீடு. ஆடு ஒன்றுக்கு ரூ. 3,000 இழப்பீடு.

‘கஜா’ புயல் காரணமாக உயிரிழந்த 45 பேர் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவு. படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்க உத்தரவு.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க தமிழக அரசு ஏற்பாடு.

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு திருநாவுக்கரசர் கோரிக்கை.

நாகை மாவட்டம் கன்னித்தோப்பு பகுதியில் புயல் பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அமைச்சர் உடன் வந்த வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் திரும்பினார்.

தமிழிசை சௌந்தரராஜன் - "குக்கிராமங்களுக்கு செல்லும் அரசு அதிகாரிகள், பொதுமக்களின் எதிர்ப்பை பொறுத்துக்கொள்ள வேண்டும். கஜா புயல் பாதித்த பகுதிகளில் உள்துறை, சுகாதாரம் மற்றும் பேரிடர் மீட்புத்துறைகள் மூலம் மத்திய அரசு நேற்றே மீட்பு பணிகளை தொடங்கிவிட்டது. மாநில அரசு என்ன உதவி கேட்டாலும் செய்ய தயாராக உள்ளோம்".

அமைச்சர் செங்கோட்டையன் - கஜா புயலில் மாணவர்களின் பாடப்புத்தகங்கள் சேதமடைந்தால் ஒருவாரத்திற்குள் புதிய புத்தகங்கள் வழங்கப்படும்

தமிழக அரசு - நாகை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது பாரத் பெட்ரோலியம் நிறுவனம்.

தஞ்சை: சஜன் -94888 60488, நாகை & திருவாரூர்: பாரதிராஜா - 88706 00738 தொடர்பு கொள்ளலாம்

மேலும் படிக்க - முதல்வரின் இழப்பீடு அறிவிப்பு குறித்த முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment