ஆதாரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் : நிலானியை மிரட்டும் காந்தியின் சகோதரன்

நடிகை நிலானி காந்தி மீது கூறும் குற்றச்சாட்டுகளை உடனே நிருத்தாவிட்டால் ஆதரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் என காந்தியின் சகோதரர் சவால் விடுத்துள்ளார்.

துணை இயக்குநர் காந்தி லலித் குமார் தற்கொலைக்கு பின்னர், பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலானி நேற்று வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பூதாகரமாக மாறிய நிலானி பிரச்சனை :

இந்த பிரச்சனை பெரிதாக வெடிக்க தொடங்கியது முதலே, நிலானி தன் பக்கம் உள்ள நியாத்தை ஊடகங்களில் கூறி வந்தார். காந்தியை காதலித்தது உண்மை தான் என்றும், அவரால் பல கொடுமைகளை அனுபவித்ததாகவும்  கூறினார். மேலும் காந்தி இவரை காதலித்தது போலவே பல பெண்களை காதலித்து ஏமாற்றியதாகவும் அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.

Actress Nilani Attempts Suicide: நடிகை நிலானியின் தற்கொலை முயற்சி குறித்த செய்திக்கு

ஒரு புறம் இவருடைய வாழ்க்கை தற்போது போராட்டமாக மாறியுள்ள நிலையில், மறுபுறம் காந்தியின் சகோதரன் மற்றும் உறவினர்கள், காந்தியின் மரணத்திற்கு நிலானிதான் காரணம் என்றும், அவர் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்து ஏமாற்றியது தெரிந்த காரணத்தினாலேயே காந்தி தற்கொலை செய்து கொண்டான் என்றும் கூறினார்.

நிலானிக்கு எச்சரிக்கை விடுக்கும் காந்தியின் சகோதரர் ரகு :

இதையடுத்து தற்போது தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலானிக்கு மிரட்டல் ஒன்றை விடுத்திருக்கிறார் காந்தி லலித் குமாரின் சகோதரர் ரகு. தனது சகோதரர் காந்தி பற்றி தவறாக கூறுவதை இத்துடன் நிறுத்த வேண்டும் இல்லையென்றால் நிலானி செய்த தவறுகளை ஆதரங்களை வெளியிட்டு நிரூபிப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

காந்தியை காதலித்தது உண்மைதான் ஆனால் கொடுமையையே அனுபவித்தேன் : நிலானியின் செய்தியாளர்கள் சந்திப்பு

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close