தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், இது குறித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்: ’நீதிபதி என்பதை பதவியாக காணவில்லை, ஒரு பொறுப்பாக கருதுகிறேன்’: உச்ச நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன்
இந்த நிலையில் பா.ஜ.க.,விலிருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், வழக்கம்போல அண்ணாமலைக்கு எதிரான விமர்சனங்களைப் பதிவு செய்துள்ளார்.
”அண்ணாமலைக்கு ஒரு பக்கம் ஆசை, ஒரு பக்கம் பீதி, ஒரு பக்கம் விளம்பரம்..
*அவர் ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் வரப் போகிறார் என்று அவரது வார்ரூம் ஒரு பொய்யான செய்தியை பரப்பியது (அவரது நீண்ட கால ஆசை), அவர் பா.ஜ.க.,வில் சேர்ந்ததற்கு முழு காரணம் இது மட்டுமே, எந்த வேலையும் செய்யாமல், சேவையும் செய்யாமல் (அவர் எப்படி தனது போலீஸ் வேலை : தேச பக்தி சேவையை முடிக்காமல் பாதி வழியில் விட்டுவிட்டார் என்பது போல) மக்கள் சேவை பிம்பம் மட்டுமே. வாயில் வடை.
*அதன் பிறகு அதே வார்ரூம் அது பொய்யான செய்தி என்று ஒரு செய்தியை பரப்பியது. ஏனென்றால் அண்ணாமலைக்கு டெல்லி அரசியல் மத்தியில் அவர் தொல்லை இருக்கும் என்று பா.ஜ.க.,வுக்கு தெரியும், அவரால் தமிழக எம்.பி சீட் வெல்ல முடியாது என்பது தெரியும் (இது பீதி).
*இப்போது அவர் இல்லாமல் தமிழக பா.ஜ.க மூழ்கிவிடும் தமிழக பா.ஜ.க.,வுக்கு அவர் தேவை என்கிறார்கள் (வெட்டி விளம்பரம்). பின்னர் அவர் பாவ யாத்திரை செய்வார் (அது விளம்பரத்திற்கான அவரது சேவை). டேய் டேய் ஸ்டாப் டா உன் நாடகம் எங்களுக்கு தெரியும்.” இப்படி காயத்ரி ரகுராம் கடுமையாக பதிவிட்டுள்ளார். இதற்கு பா.ஜ.க.,வினரும் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil