TNPSC Group 2: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு, செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம், tnpsc.gov.in -ல் முழு விவரம்!

TNPSC Group 2 notification 2018 வெளியானது. தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பு உள்ளிட்ட பிற தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளமான tnpsc.gov.in -ல் அறிந்து கொள்ளலாம்.

TNPSC Group 2 notification 2018 வெளியானது. தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பு உள்ளிட்ட பிற தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளமான tnpsc.gov.in -ல் அறிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNTET Result 2019 Result paper 2 declared

TNTET Result 2019 Result paper 2

TNPSC Group 2 Notification 2018: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வு மூலமாக 1199 பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. தேர்வு தேதி, வயது, கல்வித் தகுதி, பதவிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் tnpsc.gov.in இணையதளத்தி!

Advertisment

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

TNPSC Group 4 Result 2018: ஆகஸ்ட் 30 வரை சான்றிதழ் பதிவேற்றங்களை செய்யலாம் To Read, Click Here

TNPSC Group 4 Result 2018: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் tnpsc.gov.in -ல், 14 லட்சம் பேர் தகுதி

Advertisment
Advertisements

இந்த குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதமே வெளியிடப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அதற்கான அறிவிப்பு தள்ளிப் போய் கொண்டே இருந்தது. தற்போது குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது

TNPSC Group 2 Notification 2018: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், tnpsc.gov.in TNPSC Group 2 Notification 2018: விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 9

TNPSC Group 2 notification 2018, tnpsc.gov.in -ல் முழு விவரம்

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1199 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வு வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தனது அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பு உள்ளிட்ட பிற தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் tnpsc.gov.in அறிந்துகொள்ளலாம். குரூப் 2 தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு செப்டம்பர் 11-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

TNPSC Group 2: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு, செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம், tnpsc.gov.in -ல் முழு விவரம்!

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: