Advertisment

மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன்: வெப்சைட் தொடங்கிய 12-ம் வகுப்பு மாணவி!

பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வாலின் மகள் தான் குனிஷா.

author-image
WebDesk
New Update
Gunisha Aggarwal

குனிஷா அகர்வால்

பயன்படுத்திய லேப்டாப்பை ஆன்லைன் வகுப்பில் கலந்துக் கொள்வதற்காக, வீட்டு பணிப்பெண்ணின் மகளுக்கு அம்மா கொடுக்க, அங்கு பொறி தட்டியிருக்கிறது 17-வயது குனிஷா அகர்வாலுக்கு.

Advertisment

வெளியானது சூரரை போற்று மேக்கிங் வீடியோ : ரசிகர்கள் மகிழ்ச்சி

12-ம் வகுப்பு படிக்கும் குனிஷா டிஜிட்டல் பொருட்களுக்கு ஒரு பாலத்தை ஏற்படுத்த விரும்பி, தற்போது வெப்சைட் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் லேப்டாப், ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றை அன்பளிப்பாக வழங்க விரும்புபவர்களுக்கும், அது தேவைப்படுபவர்களுக்கும் பாலமாக மாறியிருக்கிறார் குனிஷா.

பொதுமக்களிடத்தில் அந்த வெப்சைட்டுக்கு உடனடி வரவேற்பும் கிடைத்துள்ளது. சென்னை ரோட்டரி www.helpchennai.orgஎன்ற குனிஷாவின் வெப்சைட் மூலம் 100 டேப்லெட்டுகளை அன்பளிப்பாக கொடுத்துள்ளனர். பாலசுப்பிரமணியம் என்ற டெக்கி இந்த வெப்சைட்டை வடிவமைக்க உதவியுள்ளார். அதோடு, ஏற்கனவே பயன்படுத்திய டிஜிட்டல் பொருட்களை தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பதற்கு முன்னர், தனது கம்பெனியின் இன்ஜினியர்கள் மூலம் அதனை சர்வீஸ் செய்து கொடுக்கவும் காரணமாகியிருக்கிறார்.

அன்பளிப்பாக கொடுக்க விரும்புபவர்கள், தேவைப்படுபவர்கள் என இரு தரப்பினரும் அந்த வலைதளத்தை அணுகலாம். பள்ளியின் அடையாள அட்டை, குடும்ப வருமானம், ஆதார் கார்டு ஆகிய விபரங்கள், லேப்டாப்/ஸ்மார்ட்போன் தேவையிருப்பவர்களிடத்தில் கேட்கப்படுகிறது.

சரி 17 வயதில் இப்படியொரு விஷயத்தை செய்திருக்கும் குனிஷா அகர்வால் யார் தெரியுமா? பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வாலின் மகள் தான் குனிஷா. இந்த பெருந்தொற்று காலத்தில் அனைத்து பள்ளி / கல்லூரிகளும் ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில் டிஜிட்டல் பொருட்கள் இல்லாத மாணவர்களுக்கு வகுப்பில் கலந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை சரிசெய்ய விரும்பியிருக்கிறார் குனிஷா. ‘

”எனது அம்மா டாக்டர் வனீதா அகர்வால், பயன்படுத்திய லேப்டாப்பை, எங்கள் வீட்டு பணிப்பெண் மகளுக்கு வழங்கினார். அப்போது தான் எனக்கு இது குறித்த ஐடியா எழுந்தது. அதனால் புதிதாக டிஜிட்டல் பொருட்கள் வாங்க முடியத மாணவர்களுக்கு உதவ விரும்பி, இந்த வலைதளத்தை தொடங்கினேன்” என்றார் குனிஷா.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கடவுளாக வழிபட்ட ரசிகர் மரணம்: கிராம மக்கள் அஞ்சலி

தவிர சில தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து தேவைப்படுபவர்களுக்கு, டிஜிட்டல் பொருட்களை வழங்கி வருகிறார். இன்னும் சில தினங்களுக்குள் சேவ சக்ர சமாஜம் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கும் லேப்டாப் / ஸ்மார்ட் ஃபோனை வழங்கவிருக்கிறார் குனிஷா.

“இந்த விஷயத்தில் எனது பெற்றோர்களின் பங்கும் அதிகம். ஆகஸ்ட் மாதத்தில் தான் இதன் வேலையை தொடங்கினோம். 1 மாதத்தில் 25 டிஜிட்டல் பொருட்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன” என மகிழ்கிறார் குனிஷா.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment