ரசிகர்களின் பெறும் எதிர்பார்புகளுக்கு இடையே, நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகிய சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசன் பிரேம் விடியோவில் வெளியாக இருக்கிறது.
Advertisment
இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களாக சூர்யா மற்றும் அப்பர்ணா பலாமுரலி அகியோர் நடித்து உள்ளனர். தமிழில் 'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குனர் ஆன சுதா கொங்கரா இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
'சூரரை போற்று' மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதைக்களம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது? படப்பிடிப்பின் போது நடைபெற்ற பல்வேறு சுவாரஸ்ய விஷயங்கள் போன்றவரை படக்குழுவினர் பகிர்ந்து கொள்கின்றனர்.
யூ டியூப்-ல் சில மணி நேரங்களிலேயே வீடியோ வைரலானது. சூர்யா அண்ணா உங்களுடைய சமூக அக்கறைக்கு முதலில் நான் தலை வணங்குகிறேன். அத்தோடு உங்கள் சூரரை போற்று படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொது முடக்கநிலை காரணமாக சூரரைப் போற்று படம் திரையரங்கில் வெளியாவது தள்ளிப்போனது. அதன் காரணமாக, சூரியா சூரரை போற்று படத்தை அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியிடுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இயக்குனர் சுதா கொங்குராவின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிக சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற இத்திரைப்படத்தை திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்க மனம் ஆவல் புரிகிறது. ஆனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை/ பல்துறை கலைஞர்களின் கற்பனைத் திறனையும் கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கிய கடமை" என்று சூர்யா தனது முடிவிற்கு விளக்கம் கொடுத்தார்.
மேலும், "தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை திரையுலகை சேர்ந்தவர்களும் என் திரைப்படத்தில் திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி, தங்கைகள், உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார்.
சூரரைப் போற்று படத்தின் வியாபாரம் மூலம் கிடைக்கும் பங்கில் 5 கோடி ரூபாயை தேவைப்படுபவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் சூர்யா அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil