Soorarai Pottru Teaser : நடிகர் சூர்யா தற்போது சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவின் 38-வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இதனை ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். அபர்ணா பாலமுரளி நடிக்கும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்துடன் இணைந்து, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
Soorarai Pottru teaser From Today, Suriya Sivakumar's Soorarai pottru teaser, Sudha Kongara Film
சூர்யாவின் ‘சூரரை போற்று’ பட டீசர் சம்பந்தமான அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
Highlights
17:04 (IST)07 Jan 2020
'சூரரைப் போற்று' டீசர் வெளியானது.
சூர்யா நடித்திருக்கும் 'சூரரைப் போற்று' டீசர் இன்று வெளியானது.
16:45 (IST)07 Jan 2020
மோகன்லால் வெளியிடும் சூரரைப் போற்று டீசர்
சூர்யாவின் சூரரைப் போற்று டீசர் இன்று மாலை 5 நடிகர் ரிலீஸாக உள்ள நிலையில், மோகன்லால் டீசரை வெளியிடுகிறார்.
15:56 (IST)07 Jan 2020
ரெக்கார்டுக்கு அடித்தளமிடும் ரசிகர்கள்
சூரரைப் போற்று டீசர் வெளியான பிறகு, வியூஸ், லைக்ஸ், கமெண்ட் போன்றவற்றில் தங்கள் ஹீரோவின் டீசர் சாதனை படைக்க வேண்டும் என்ற ரசிகனின் ப்ரீ பிளானிங் வேண்டுகோள்,
இன்று சூர்யா ரசிகர்களுக்கு, எங்களுக்கு போட்டி யார்யா மொமன்ட் தான். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சூரரைப் போற்று படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
Suriya Sivakumar's Soorarai pottru teaser: நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகிறது. அப்படத்தின் இடைவேளையின்போது சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தின் டீசரை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள ஒரு சில முக்கிய திரையரங்குகளுக்கு ‘சூரரை போற்று’ டீசர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி சூர்யாவின் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியாக இருக்கும் எனத் தெரிகிறது.
Highlights