குட்கா வழக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் : தமிழகத்தில் குட்கா பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முறைகேடாக குட்கா பொருட்களை விற்ற விவகாரத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குட்கா வழக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக உத்தரவு
இந்த விசாரணை தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வந்தனர். குட்கா ஆலை உரிமையாளர் மாதவ்ராவ் உட்பட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க : குட்கா வழக்கு : இரண்டு அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி