ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். சர்ச்சைக்குரிய வீடியோ வெளியான விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஹெச்.ராஜா, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யப்பபுரம் என்ற ஊரில் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அங்கு அவருக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Read More: போலீஸாருடன் கடும் மோதல் : நீதிமன்றத்தையும் அவமதித்தாரா ஹெச். ராஜா? Click Here
ஹெச்.ராஜா, தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. இல்லத்தில் நடைபெற்ற ரெய்டை குறிப்பிட்டு போலீஸாரை விமர்சித்தார். சென்னை உயர் நீதிமன்றம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் விமர்சனம் செய்ததாக வீடியோ வெளியானது.
ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு:
இதைத் தொடர்ந்து ஹெச்.ராஜா மீது நடவடிக்கை கோரி சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்லவும் வழக்கறிஞர்கள் தயாராகி வருகிறார்கள்.
Read More; ஹெச். ராஜாவை வைத்து செய்யும் நெட்டிசன்கள் Click Here
Read More: நீதிமன்றத்தை மதிப்பவன் நான்... அந்த குரல் என்னுடையது இல்லை - ஹெச். ராஜா Click Here
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற ஏரியாவான புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் காவல் நிலையத்தில் ஹெச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போலீஸ் அதிகாரிகளை பணி செய்ய விடாதது, இரு சமூகங்கள் இடையே பிரச்னை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுதல், நீதிமன்றம் குறித்து விமர்சனம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை இந்த விவகாரம் எழுப்பப்பட்டால், அரசுத் தரப்பில் வழக்குப் பதிவு செய்திருக்கும் தகவலை கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.