Advertisment

தி.மு.க ஆட்சி இன்னும் எத்தனை நாள் ஓடும் என உறுதியாக கூற முடியாது: ஹெச். ராஜா

விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சினிமாவில் இருப்பதனால் வெற்றி பெறலாம் என சொல்ல முடியாது – ஹெச்.ராஜா

author-image
WebDesk
New Update
H Raja

கோவையில் பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேட்டி அளித்தப்போது

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம். ஆனால் சினிமாவில் இருப்பதால் வெற்றி பெறலாம் என சொல்ல முடியாது என கோவையில் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Advertisment

கோவை ராம் நகர் பகுதியில் உள்ள அரங்கில் பா.ஜ.க.,வின் மூத்த உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படியுங்கள்: தமிழர்களின் இசை, பண்பாட்டை மீட்பது நம் தலையாய கடமை: கோவை நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு

publive-image

அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழகத்தில்.சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சி நடைபெறுகிறதா என்ற கேள்வி எழுகிறது? ஜனநாயக விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜியை ஜெயிலில் வைப்பேன் என தெரிவித்த ஸ்டாலின் வருத்தப்படுகிறார். அவர் மகிழ்ச்சியாக தான் இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியும், அவரது தம்பியும் கரூரை கைக்குள் வைத்திருந்தனர்.

எமர்ஜென்சி காலத்தில் ஒன்றரை வருஷத்திற்கு கட்சி வேட்டி கட்டாதவர்கள் தி.மு.க.,வினர். சட்டத்திற்குட்பட்ட ஆட்சியில்லை. ஸ்டாலினுக்கு எச்சரிக்கையாக ஆலோசனையாக சொல்கிறேன். பா.ஜ.க.,வை சீண்ட வேண்டாம், சீண்டினால் அதற்கான பலன் அனுபவித்துக் கொண்டிருக்கிறது அதிகமாகும்.

அரசியலமைப்பு சட்டப்படி அமைச்சர்களை நியமிப்பது முதல்வரின் அறிவுறுத்தலின் படி ஆளுநர். ஆளுநர் நினைத்தால் அமைச்சரை நீக்கலாம் என சட்டம் உள்ளது. பா.ஜ.க சூர்யாவை கைது செய்ததற்கு கண்டனம். அவர் சொன்னதில் என்ன தவறு? அவர் சொன்ன சம்பவம் உண்மை தான். திருமாவளவன் தீய சக்தி. டி.ஜி.பி.,க்கு சட்டப்படி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இல்லை, எஜமான் சொல்வதைக் கேட்கிறார். டி.ஜி.பி., செய்தது அராஜகமான செயல். தி.மு.க.,வின் அழிவு ஆரம்பம்.

publive-image

சிறைக்கு சென்றதில் செந்தில் பாலாஜி முதல் நபர். தி.மு.க.,வில் ஊழல் செய்த அத்தனை பேரும் சிறைக்கு போவீர்கள். இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஆட்சி ஓடும் என உறுதியளிக்க முடியாது, மோசமான சூழல் தமிழகத்தில் உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை நேரில் பார்த்த முதல்வர். வெட்கப்பட வேண்டும். மோசமான ஆட்சி. மக்கள் இந்த ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவது தமிழகத்திற்கு நல்லது. குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு உள்ளது, மத்திய அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளது, கர்நாடகாவில் பா.ஜ.க.,வை சேர்ந்தவர்களும் இந்த அமைப்புகளின் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய முடிகிறது.

டாஸ்மாக்கில் நடக்கும் ரூ.10 கூடுதலாக வாங்குவது தொடர்பாக நிரூபிக்கப்பட்டது. ஊழல் நடைபெறுகிறது என நிரூபித்த ஊடகங்களுக்கு நன்றி. சபரீசன் ஏன் செல்ல வேண்டும்? என்ன தொடர்பு? புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பட்டியலிட்டு சொல்கிறார். தங்களுடனான தொடர்பை சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் செந்தில் பாலாஜியை பார்பதற்கு இரவோடு இரவாக ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஓடுகிறார்கள். அரசியல் தொடர்பு இல்லாத சபரீசன் பார்த்ததற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டும்?

இந்த ஒவ்வொரு விஷயத்தையும் மக்களிடம் பா.ஜ.க சொல்லும். 2018ல் ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலின் பகிரங்கமாக செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்புவோம் என சொன்ன சபதம் தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. வாயாலும், செயலாலும் அமைதியாக இருக்க வேண்டும், இல்லையென்றால் தக்க எதிர் விளைவுகள் வரும்.

விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் சினிமாவில் இருப்பதனால் வெற்றி பெறலாம் என சொல்ல முடியாது, நடிப்பிற்கு சிவாஜியை  போல் பிறந்து வர வேண்டும், ஆனால் அரசியலில் சிவாஜியால் வெற்றிப்பெற முடியவில்லை. டி.ராஜேந்தர், பாக்கியராஜ் ஆகியோரால் வெற்றிப்பெற முடியவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நீண்ட நாட்கள் அரசியலில் இருந்தவர்கள். விஜயின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறோம்.

publive-image

ஈ.வே.ரா., ஒழுக்கமில்லாதவர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள், சாமி சிதம்பரனார் மற்றும் கண்ணதாசன் எழுதிய வனவாசம் ஆகிய புத்தகங்களை மாணவர்களுக்கு முழுவதுமாக கட்டாயமாக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை போதைப்பொருளாக, காசுக்கு விலைப்பேசி விற்ற கூட்டம் திராவிட இயக்கங்கள்.

அமித்ஷா பேசியதை யாரும் முழுவதுமாக தெரிந்துக்கொண்டு பேச மறுக்கிறோம். நம் மன்னர்கள் சோழர்களை பற்றி பேச மறுத்து அன்னியர்களுக்கு மட்டும் இடம் கொடுக்கிறோம். நாம் நம்மை சுருக்கி கொண்டோம். தமிழர்களால் பிரதமர் அளவிற்கு வருவதற்கு முடியாமல் போனது. தேசிய அளவில் நாம் வர வேண்டும் என்று அவர் சொன்னார். இவ்வாறு ஹெச்.ராஜா பேசினார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Bjp H Raja Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment