hai guys, darbar, rajinikanth, a r murugadoss, politics, cabinet ministry, ravindranath, deputy chiefminister panneer selvam, bsnl, mtnl, chennai, metro stations, புத்தாண்டு, 2020 புத்தாண்டு, தர்பார், ரஜினிகாந்த், ஏ ஆர் முருகதாஸ், அரசியல், மத்திய அமைச்சரவை, ரவீந்திரநாத், துணை முதல்வர் பன்னீர்செல்வம், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், சென்னை, மெட்ரோ ரயில் ஸ்டேசன்கள்
ஹாய், ஹலோ, எல்லாரும் எப்படி இருக்கீங்க, வீக்எண்டை செமயா என்சாய் பண்ணிக்கிட்டு இருப்பீங்க... வாங்க அதே ஜாலியோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிறலாம்..
Advertisment
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
டிசம்பர் 29 தேதி ஆயிருச்சு...இன்னும் 2 நாள்ல புது வருசம் பொறக்கப்போகுது. இந்த வருசம் என்னென்ன பண்ணணும்னு நினைச்சோமோ அதெல்லாம் பண்ணாததனால அடுத்த வருசமும் அத தள்ளிப்போடாம, புது வருசத்தை புது விசயங்கள்ளோட ஆரம்பிங்க ப்ரோஸ் அண்ட் சிஸ்ஸ்...
வாங்க இன்னைய புரோகிராமுக்கு போவோமா...
தர்பார் படத்துல அரசியல் இல்லையாம். டைரக்டர் முருகதாஸே சொல்லியிருக்காரு. படத்துல தர்பார் படத்தில் ரஜினியின் அதிரடி 'பஞ்ச் டயலாக்'குகள் அதிகம் உள்ளது. ஆனால் அரசியல் எதுவும் இல்லை. மேலும் இந்த படத்துல பல சம்பிரதாயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்கனு அவர் சொல்லியிருக்காப்ல, பார்ப்போம்..
தலவரே, படத்துல தான் அரசியல் இல்மாற்றல, நீங்களாவது அரசியலுக்கு வர்ற ஐடியாவில இருக்கீங்களா இல்லையா!!!, முடியல..
ஜனவரி, 15க்கு மேல், மத்திய அமைச்சரவையில் ம் வரப்போகிறது; 2021 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, தமிழ கத்தில் ஒருவருக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.
நம்ம கல்வெட்டு நாயகனுக்கு வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அப்ப தர்மயுத்தத்துக்கு இனி வேலை இருக்காது என நம்பலாம்.
அதலபாதாளத்தில் உள்ள பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களை மீட்க 7 அமைச்சர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாம்.
கண்கெட்டபிறகு சூர்ய நமஸ்காரம் செய்து என்ன பயன்னு பக்கத்து சீட்காரர் புலம்புகிறார்.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில்,இசை கலை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
வரவேற்கத்தக்க முயற்சி தான், சல்யூட் டீம்.
ஓகே மக்காஸ், மீ்ண்டும் இன்னொரு நிகழ்ச்சியில் பார்ப்போம், வரட்டா...