Hai guys - மக்களே, ஜனநாயக கடமையை செலுத்திட்டீங்களா...
Train ticket fare hike : ரயில் கட்டணம் உயரப்போகுதாம் மக்காஸ். ரயில்வேக்கு வர வேண்டிய வருவாயின் அளவு கணிசமான அளவு குறைஞ்சுட்டதனால. இந்த உயர்வு அமல்படுத்த திட்டமிட்டிருக்காங்களாம்.
Train ticket fare hike : ரயில் கட்டணம் உயரப்போகுதாம் மக்காஸ். ரயில்வேக்கு வர வேண்டிய வருவாயின் அளவு கணிசமான அளவு குறைஞ்சுட்டதனால. இந்த உயர்வு அமல்படுத்த திட்டமிட்டிருக்காங்களாம்.
tamil nadu, local body elections, train ticket fare, rrb, upsc exams, school, holiday, minister sengottaiyan, madurai, உள்ளாட்சி தேர்தல், ரயில் கட்டணம் , கட்டண உயர்வு, ரயில்வே தேர்வுகள், யுபிஎஸ்சி, பள்ளி, விடுமுறை, சிறப்பு வகுப்புகள், அமைச்சர் செங்கோட்டையன், மதுரை
வணக்கம், வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்..
Advertisment
டிசம்பர் 27 தேதி ஆயிருச்சு, வீக் என்டு முடிஞ்சு 2 நாள்ல புத்தாண்டு 2020 பொறக்கப்போகுது. எல்லாரும் 2020யை உற்சாகமா வரவேற்க தயாராயிருப்பீங்க. உங்க எல்லாருக்கும் அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்....
ஊரக உள்ளாட்சி தேர்தல், 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்துகிட்டு இருக்கு. ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்துகிட்டு இருக்கு. 4700 ஊராட்சி தலைவர்கள், 37,830 வார்டு உறுப்பினர்கள், 2546 ஒன்றிய வார்டு உறுப்பினர், 260 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்னைக்கு நடக்குற தேர்தல்ல தேர்ந்தெடுக்கப்பட போறாங்க. .உங்களுக்கும் வாக்கு இருந்தா, தவறாம ஓட்டு போட்டுங்க மகா ஜனங்களே...
Advertisment
Advertisements
ரயில் கட்டணம் உயரப்போகுதாம் மக்காஸ். ரயில்வேக்கு வர வேண்டிய வருவாயின் அளவு கணிசமான அளவு குறைஞ்சுட்டதனால. இந்த உயர்வு அமல்படுத்த திட்டமிட்டிருக்காங்களாம். ரயில்வே உயரதிகாரி சொல்லியிருக்காப்ல.
அதேபோல, ரயில்வேயில வேலை வேணும்னா முன்னாடி ரயில் வாரிய தேர்வு எழுதிகிட்டு இருந்தோம்ல, இனிமே அது கிடையாதாம், யுபிஎஸ்சி தேர்வு எழுதித்தான் ரயில்வேயில இனி வேலைக்கு சேர முடியுமாம். ரயில்வே வாரிய செயலாளர் வி.கே.யாதவ் சொல்லியிருக்காப்ல
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறை காலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அமைச்சரே, பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் ஓட்டு இருந்துச்சுன்னா, அல்லா ஓட்டும் உங்களுக்குத்தான் அமைச்சரே...
இளைய தலைமுறை எனும் அமைப்பை துவக்கியுள்ள பாசக்கார மதுரை இளைஞர்கள், வீடு வீடாக துளசி கன்று, மரக்கன்றுகள், நெல்லிக்காய் வழங்கி இயற்கை வளம் குறித்து விளக்கி வருகின்றனர். வாழ்த்துக்கள் சகோஸ்....
ஓகே மக்களே.....மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில் சந்திப்போம்.நல்லதையே சிந்திப்போம்...Bye....