Advertisment

Hai guys : புத்தாண்டு கொண்டாட்ட களத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை

New year 2020 : இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்கிறது. மக்கள் கோயில்கள், பீச் என பெரிய பிளானுக்கு ஏற்பாடு பண்ணியிருப்பீங்க. இந்த வருசம் செய்ய நினைச்சு முடியாதது எல்லாம் அடுத்த வருசம் வெகுசிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hai guys, new year, new year 2020, chennai, tamil nadu, darbar, rajinikanth, metro rail, school holiday

hai guys, new year, new year 2020, chennai, tamil nadu, darbar, rajinikanth, metro rail, school holiday, புத்தாண்டு, புத்தாண்டு 2020,சென்னை, தமிழ்நாடு, தர்பார், ரஜினிகாந்த், மெட்ரோ ரயில் சேவை, பள்ளி விடுமுறை

2020 புத்தாண்டை எல்லாரும் ஆர்வமோட வரவேற்க தயாராகியிட்டிருக்கிற இந்த நேரத்துல உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்வது உங்கள் hai guys குமரன்..

Advertisment

இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறக்கிறது. மக்கள் கோயில்கள், பீச் என பெரிய பிளானுக்கு ஏற்பாடு பண்ணியிருப்பீங்க. இந்த வருசம் செய்ய நினைச்சு முடியாதது எல்லாம் அடுத்த வருசம் வெகுசிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்

ஐயய்யோ லீவு முடியப்போகுதே என்ற சோகத்தில இருந்த பள்ளி குழந்தைகளுக்குதான் மொதோ புத்தாண்டு பரிசாக, அரசு லீவை ஒரு நாள் நீட்டிச்சுருக்கு. 3ம் தேதிக்கு தொறக்குறதா இருந்த பள்ளிகள், 4ம் தேதி திறக்கப்போறதா அறிவிச்சிருக்காங்க..... என்சாய் பண்ணுங்க குட்டீஸ்...

Hai guys : 2019 மட்டுமல்லாம, நாளைக்கு இதுவும் முடியுதாம்.... So sad..

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில், 5,000 கி.மீ., வனப்பகுதி அதிகரித்துள்ளது; இது, பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு ஏற்ப, கூடுதலாக, 250 - 300 கோடி டன், 'கார்பன் சின்க்' எனப்படும் 'கரிம வளம்' உருவாக்கத்திற்கு துணை புரிந்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். நல்ல விசயம் தான்...

Hai guys : தர்பார் படம்ல அரசியல் இல்லையாம்ல....கேட்டுக்கோங்க மக்காஸ்

தர்பார் படம் 9ம் தேதி ரிலீஸ் ஆகப்போகுதுனு தயாரிப்பு நிறுவனம் அறிவிச்ச நாள்லயே, அந்த படம் வெளிவர்றதுக்கு தடைகோரி கோர்ட்ல கேஸ் போட்டிருக்கு ஒரு குரூப்..

அய்யய்யோ என ரஜினி ரசிகர்கள் பதறியடிக்க, இதெல்லாம் ஒரு புரோமோஷனல் டாக்டிகஸ் என்று நகர்கிறார் மடச்சாம்பிராணி வியாபாரி...

சிறந்த நிர்வாகத்திறன் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்துக்கு வந்த கொண்டாட்டமே இன்னும் நிறைவடையாத நிலையில், நிடி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சிகளை எட்டியுள்ள மாநிலங்களோட பட்டியல்ல. தமிழகம் 3வது இடம் பிடிச்சிருக்காம்... சொல்லிக்கிறாங்க..

(இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்குங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்குது, மெதுவா பேசுங்க..)

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில மெட்ரோ ரயில் சேவை இன்னைக்கு நள்ளிரவு வரைக்கும் நீட்டிச்சுருக்காங்க....பயன்படுத்திக்கோங்க மக்களே..

ok guys, மீண்டும் நான் உங்கள அடுத்த வருசம் (2020) சந்திக்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். வரட்டா....

Tamil Nadu Chennai School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment