Hai guys : தலைவர் படத்த தல பாக்கபோறாராம் ; எல்லாம் இதுக்காகத்தான்….

Hai guys : பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் எதுவந்தாலும், இது அதோட காப்பிதான்னு நம்ம மக்கள் ஒடனே கண்டுபிடிச்சுர்றாங்க

By: Updated: January 6, 2020, 05:09:56 PM

Hai guys எப்படி இருக்கீங்க, பள்ளி, கல்லூரி எல்லாம் திறந்தாச்சு…வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு ஸ்கூல் தொறந்துட்டாங்களேனு நீங்க கவலைப்பர்றது புரியுது…

தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!

போதும் பாஸ் லீவு, அடுத்த வாரம் பொங்கல் லீவு வரப்போகுது அதை நினைச்சு சந்தோசப்படுங்க.
வாங்க, நாம நிகழ்ச்சிக்கு போவோம்…

Hai guys : ரயில், கேஸ் சிலிண்டர் விலையுயர்வு என கோலாகலமாத்தான் ஆரம்பிச்சிருக்கு புத்தாண்டு

Hai guys : 2019 மட்டுமல்லாம, நாளைக்கு இதுவும் முடியுதாம்…. So sad..

சட்டசபை கூட்டத்தொடர் இன்னைக்கு தொடங்குது. மொத நாள் என்கிறதனால, கவர்னர் இன்னைக்கு உரை நிகழ்த்துறார். இந்த உரையில, மேலும் 3 புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது.

சென்னையில நேத்து நைட்டுல இருந்து வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில, காலையில பலபகுதிகள்ல நல்ல மழை பெஞ்சிருக்கு…இன்னும் வானம் கொஞ்சம் கரு கருனு இருக்கு, குடைய எடுத்துட்டு போக மறந்துறாதீங்க மக்காஸ்..

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்துல மர்மநபர்கள் கொலைவெறித்தாக்குதல நடத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவிச்சுட்டு வர்றாங்க. தலைநகர் டில்லியிலயே இந்த நிலைன்னா, மத்த பகுதிகள்லாம்… நினைச்சாலே பயங்கராமால்ல இருக்கு…

வைகுண்ட ஏகாதசிய முன்னிட்டு வைணவ கோயில்களில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம், திருப்பதி ஏழுமலையான் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நல்லது நடந்தா ரைட்டு தான்!!!

தர்பார் படத்த பாத்தபிறகு தான் அஜித் பட ஷூட்டிங் துவங்கப்போகுதாம். ஏன்னா, இரண்டுமே போலீஸ் கதைங்கிறதனால அந்த படத்தோட காப்பினு யாரும் சொல்லிறக்கூடாதுங்கிறதனால, இந்த நடவடிக்கையாம்!!!
ஆமாப்பு, இப்பல்லாம் பர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் எதுவந்தாலும், இது அதோட காப்பிதான்னு நம்ம மக்கள் ஒடனே கண்டுபிடிச்சுர்றாங்க…. சூதானமா இருந்துக்கோங்கப்பு

ஓகே, மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம்.. Bye…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Hai guys schools open delhi students attack darbar rajinikanth valimai team ajith

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement