Advertisment

வண்டலூர் பூங்கா, முதலை வங்கிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஹெச்.சி.எல்!

இரண்டுமே, விலங்குகளின் பராமரிப்புக்காக பார்வையாளர்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பெரிதும் சார்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
HCL to extend its support to Vandalur Zoo, Crocodile Bank

வண்டலூர் பூங்கா மற்றும் முதலை வங்கிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஹெச்.சி.எல்

இந்தியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான வண்டலூரில் உள்ள அறிஞர்  அண்ணா விலங்கியல் பூங்கா மற்றும் மெட்ராஸ் முதலை வங்கி ஆகியவற்றிற்கு மிகப்பெரும் ஐ.டி நிறுவனமான ஹெச்.சி.எல் தனது ஆதரவை வழங்கி வருகிறது.

Advertisment

கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28-ல் திறப்பு: விதிமுறைகள் என்னென்ன?

ஹெச்.சி.எல் விலங்குகளுக்கு தீவனம் மற்றும் கவனிப்பு என இரண்டு வழிகளிலும் தனது ஆதரவை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் ஆறு மாத காலத்திற்கு துப்புரவு மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள பராமரிப்பாளர்களுக்கு சம்பளத்தையும் வழங்குகிறது.

உயிரியல் பூங்கா மற்றும் முதலை வங்கி இரண்டுமே, விலங்குகளின் பராமரிப்புக்காக பார்வையாளர்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால் கொரோனா தொற்றுநோய் விளைவாக இந்த வருவாய் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு பூங்காக்களும் விலங்கு பராமரிப்புக்காக வெளிப்புற ஆதரவை எதிர்பார்க்கிறது.

2,000-க்கும் மேற்பட்ட பெரிய முதலைகள், 100 இளம் முதலைகள் மற்றும் பிற உயிரினங்களைக் கொண்ட முதலை வங்கி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரிய உயிரினங்களைப் பாதுகாப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது முதலை வங்கி.

நன்றியைத் தெரிவித்த மெட்ராஸ் முதலை வங்கியின் இயக்குனர் ஆல்வின் ஜேசுடாசன், “நமது சுற்றுச்சூழல் அமைப்பில் சமநிலையைப் பேணுவதில் ஊர்வன முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், தொற்றுநோய் அவர்களின் உயிர் வாழ்வை அச்சுறுத்துகிறது. இந்த சவாலான காலங்களில் முதலை வங்கியை ஆதரிக்கும் ஹெச்.சி.எல்-க்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விலங்கு நலன் குறித்த அவர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி” என்றார்.

கொரோனா தொற்று: உலகின் உச்சபட்ச எண்ணிக்கையை தொட்ட இந்தியா

பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளிட்ட 170 இனங்களைச் சேர்ந்த 2,700 விலங்குகளைக் கொண்ட சென்னையின் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவின் இயக்குனர் டெபாஸிஸ் ஜனாவும் ஹெச்.சி.எல்-இன் முயற்சிகளைப் பாராட்டினார். தற்போதைய சூழ்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு அதிக ஆதரவு தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment