Advertisment

குரங்கு அம்மை; விமான பயணிகளை கண்காணிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவு

குரங்கு அம்மை பரவல் எதிரொலி; தமிழகம் வரும் விமானப் பயணிகளைக் கண்காணிக்க சுகாதாரத்துறை உத்தரவு

author-image
WebDesk
New Update
Two cases of Omicron Covid variant found in Karnataka, two cases of omicron confirms Health Ministry, இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு, மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு 2 பேருக்கு ஒமிக்ரான், கர்நாடகா, கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு, ஒமிக்ரான் வைரஸ், Omicron variant, Omicron cases in karnataka, two omicron cases confirms

Health department order to vigil international passenger on monkey box prevention: குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வரும் விமானப் பயணிகளை கண்காணிக்க தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு மனிதருக்கு முதல்முறையாக 1970 ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று 2017 ஆம் ஆண்டு முதல் நைஜீரியா, காங்கோ நாடுகளில் மீண்டும் பரவியது. தற்பொழுது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் பரவி வருகின்றன.

இதனையடுத்து, குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் சென்று வந்தவர்கள் தகவல் தர வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், தமிழகத்தில் இந்த நோய் பரவாமல் தடுக்க பொது சுகாதாரத் துறை இயக்கம், மாவட்ட சுகாதாரத் துறைக்கு இன்று பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை, கோவை போன்ற சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: அமைச்சர் ஆக மாட்டேன் என உதயநிதி உறுதி கூறுவாரா? சீமான் கேள்வி

அவர்களில் சளி, காய்ச்சல், உடல்வலி போன்ற குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனை அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

குரங்கு அம்மை தொற்று நோய் கண்காணிப்பு பணிகள் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்தில் இன்றிரவு சர்வதேச ஆய்வு மேற்கொள்கின்றனர், என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment