தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்த வெங்கடேசனும், டிரைவர் செல்வமும் நேற்று எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் உயிர் இழந்துள்ளனர்.
கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..
புதுக்கோட்டை மாவட்டத்தின் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகை தேர்தல் நேற்று நடைபெற்றது.
தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!
கடந்த 27,30 களில் நடந்த மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக 8 இடங்களையும், திமுக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிகள் சேர்த்து 13 இடங்களையும் பிடித்தனர். சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார்.
கோயம்பேடு திணறுகிறது: சென்னை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்
இதனால்,மாவாட்டத் தலைவர் பதவி திமுக கூட்டணிக்கு கட்டாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்த்த நிலையில் அதிமுக மாவட்டத் தலைவர் பதவியை கைப்பற்றியது.
இந்த பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த ஜெயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு விஜயபாஸ்கர் தனது ட்விட்டரில், "புரட்சித்தலைவி அம்மாவின் வாக்கு
பொன்னானது புதுகையின் வெற்றியால்
ஜெயித்துக்காட்டினார் ஜெயலட்சுமி!
தலித்பெண்மை வென்றது ஏழைவீட்டு விவசாயத்திருமகள் ஊராளப்போகிறார் நெத்தியடி இந்த வெற்றி இனி என்றென்றும் பறக்கும் இரட்டை இலைக் கொடி" என்று பதிவு செய்திருந்தார்.
மறைமுகத் தேர்தலில் முந்திய ஆளும் கட்சி: அதிமுக அணி 14, திமுக 12
தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு சென்னைக்கு திரும்பினார். அமைச்சரை திருச்சி விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்துவிட்டு இரவு தனது காரில் சொந்த ஊரான பரம்பூருக்கு திரும்பி கொண்டிருந்த வெங்கடேசனின் கார், கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே புளியமரத்தில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலே வெங்கடேசனும், டிரைவரும் உயிர் இழந்தனர். இது குறித்து அன்னவாசல் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அ.தி.மு.கவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் வெங்கடேசன் இருந்தார் என்பதும் குறிபிடத்தக்கது.
நெருங்கிய அரசியல் வட்டாரத்தில் பவ் என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த வெங்கடேசனுக்கு, விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழந்த இறங்களையும் தெரிவித்து இருக்கிறார்.
அவர் தனது இரங்களில்,"நீ இந்த உலகில் இல்லை என்பதை அறிய என் இதயம் பிளவுபடுகிறது. பல நினைவுகள் என் மனதை அழுத்துகின்றன, உனது இழப்பை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு வேதனையான வலி.
My heart rips apart to know you are no more in this https://t.co/Qzw8NDFfw4 many memories flash my mind,this is an excruciating pain to accept your loss.31 is too early to leave,you are not around to console me in this most difficult situation, May your soul #RIP my dear BOW???????? pic.twitter.com/XyPed7PDXC
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) January 12, 2020
31 வயதில் மரணம் என்பது மிக விரைவாக இருக்கிறது, இந்த மிகவும் கடினமான சூழ்நிலையில் என்னை ஆறுதல்படுத்த நீங்கள் இல்லை , உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் என் அன்பே BOW
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.