எப்போதும் போல தக்காளி, தேங்காய் சட்னி செய்து ஃபோர் அடித்து விட்டதா? அப்போ ஒருமுறை இந்த மாதிரி ஹெல்தியான சட்னி செய்து பாருங்கள். மருத்துவரை அணுக வேண்டிய தேவையே இருக்காது.
நெல்லிக்காய் வைத்து ஒரு சட்னி. நெல்லிக்காய் சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இந்த சட்னி சாப்பிடுவார்கள். இட்லி தோசைக்கு எல்லாம் ஏற்ற காரசாரமான சத்தான ஒரு சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை
கடலை பருப்பு
உளுந்து
எண்ணெய்
நெல்லிக்காய்
பூண்டு
புதினா
காய்ந்த மிளகாய்
புளி
கருவேப்பிலை
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
ஒரு கடாயில் கடலைப்பருப்பு உளுந்து இரண்டையும் மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். இது சிவந்து வரவேண்டும்.
அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் தேவையான அளவு நெல்லிக்காயை சேர்த்து வறுக்கவும். இதை நறுக்கியும் வறுக்கலாம் அப்படியே முழு நெல்லிக்காய் போட்டு வறுக்கலாம்.
பின்னர் அதில் பூண்டு, புதினா, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், புளி சேர்த்து வறுக்கவும். முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பருப்பை மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
டாக்டர் கிட்டயே போக வேண்டாம்..வாரத்திற்கு நான்கு நாள் இதை செய்து கொடுங்க...
அதில் நெல்லிக்காய் மற்றும் தாளித்து வைத்துள்ள பூண்டு, புதினா கலவையை சேர்த்து பேஸ்ட் பதத்தில் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதனை எப்போதும் போல தாளிக்க எண்ணெய், கடலைப்பருப்பு, கருவேப்பிலை, இரண்டு மிளகாய், சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சட்னியோடு சேர்த்தால் ஹெல்தியான நெல்லிக்காய் சட்னி ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“