Heavy Rain Alert on Delta Region : கஜ புயலின் கோர தாண்டவத்தில் மீண்டு வரவே டெல்டா மக்களுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தேவைப்படும். சாலைகள், மின்சாரவசதி, குடிநீர், குடியிருப்புப் பகுதிகள், அவசியத் தேவை என அனைத்தும் முற்றிலும் சேதாரமாகியுள்ளன.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கஜவின் சீற்றத்தை தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கனமழையாக உருவெடுக்கும் வாய்ப்புகளைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டன.
பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தின் உட்பகுதிகளில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதால் மீண்டும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
Heavy Rain Alert on Delta Region
இன்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தர் “செய்தியாளர்கள் சந்திப்பில், வட தமிழகத்தில் பரவலாகவும், தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்யும்” என்று கூறியிருக்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், விருதுநகர், திருச்சி, மற்றும் நாமக்கல் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
November 2018
அடுத்த 24 மணி நேரத்திற்கு கஜ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் படிக்க : கஜ களப்பணியில் மின்வாரிய ஊழியர்கள்.. குவியும் பாராட்டுகள்