/tamil-ie/media/media_files/uploads/2019/04/a1203.jpg)
High amount of money seized in IT Raid at Vellore constituency cement godown - வேலூர் சிமெண்ட் குடோனில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்! வெளியான பரபரப்பு வீடியோ
Income Tax Department Raid Vellore : நேற்று காலை வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த வீடு மற்றும் கல்லூரில் வருமான வரி சோதனை நடைபெற்றது. பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக பகுதிச் செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், கீழ்மேட்டூரில் உள்ள சீனிவாசனின் சகோதரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
காட்பாடி வஞ்சூர் பகுதியில் உள்ள அக்கட்சி ஒன்றிய செயலாளர் பெருமாள் என்பவருக்கு சொந்தமானவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கதிர் ஆனந்திற்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது.
Income Tax Department Raid Vellore Video
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் படைக்கும் படையினர் ஒருபக்கம் தங்கள் கண்காணிப்பை முடுக்கிவிட, மறுப்பக்கம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் பள்ளிக் குப்பம் பகுதியில் உள்ள சிமெண்ட் குடோனில் ஒன்றில் கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான மதிப்புள்ள பணம் சிக்கியுள்ளது. தெளிவாக வார்டு வாரியாக எழுதப்பட்டு, பணம் பார்சல் செய்து சாக்குப்பையில் அடைக்கப்பட்டு பதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குடோன் யாருடையது என்பது குறித்தும், இவ்வளவு அதிகமான பணம் அங்கு பதுக்கி வைத்தது யார் என்பது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க - துரைமுருகன் மகன் கல்லூரியில் மீண்டும் ரெய்டு... ஐகோர்ட்டில் கதிர் ஆனந்த் முறையீடு!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.