Tamil Nadu news today updates: சசிகலா வருகையையொட்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக அதிமுக, அமமுக கட்சிகள் பரஸ்பர புகார் கூறியுள்ளன. சசிகலாவும், தினகரனும் அதிமுக கொடியை பயன்படுத்தி கலவரத்தை உருவாக்க திட்டமிடுவதாக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோர் டிஜிபி-யிடம் மனு அளித்தனர். அமைச்சர்கள் கலவரத்திற்கு திட்டமிடுவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். திங்கட்கிழமை (8-ம் தேதி) சசிகலா சென்னை திரும்புவது குறிப்பிடத்தக்கது.
“தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு, முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியரசுத் தலைவரை நாளைக்கே சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் “ஆளுநர் மறைத்து பேசக்கூடாது” என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
“ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பதியப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும், மற்றும் காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்த வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து திரும்பப் பெறப்படும் ” என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெறும். ஜூன் மாதத்திற்கு பிறகுதான் நேரடி வகுப்புகள் தொடங்கும் என சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
“பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; சம்பள உயர்வு போதுமானதல்ல இல்லை” என்ற கோரிக்கையை விடுத்துள்ள ஜாக்டோ – ஜியோ
அமைப்பினர், உண்ண விரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கேட்கப்படாத மக்களின் குரலே போராட்டமாகும்.தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்கும் விவசாயிகளின் உரிமைக்காக போராடுவதும், உறுதுணையாக இருப்பதுமே ஜனநாயகம் என்று விவசாயிகளுக்கு வெற்றிமாறன் ஆதரவாக இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்
சொத்துவழக்கில் 4 ஆண்டு தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவின் உறவினர் இளவரசி நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானார். இந்நிலையில் இளவரசி சசிகலா தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டியில், போட்டியின் முதல் நாளிலே அந்த அணிக்கு அதிக ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சிபிலி முதல் நாள் ஆட்ட முடிவில் அவுட் ஆகி வெளியேறினார். 286 பந்துகளைச் சந்தித்திருந்த சிபிலி 12 பவுண்டரிகளை பறக்க விட்டு 87 ரன்களைச் சேர்த்திருந்தார். அந்த அணியில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் கேப்டன் ஜோ ரூட் (136ரன்கள் 227பந்துகள் 15பவுண்டரிகள் 1சிக்சர்) அதிரடி காட்டி இன்னும் களத்தில் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil
Live Blog
Tamil News : தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே முடிவு எடுக்கும் அதிகாரம் இருப்பதாக தமிழக ஆளுனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தடுப்பூசிகளை வழங்கும் பணியில் இந்தியா தொடர்ந்து மிக வேகமாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 745 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
இன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
அமைச்சர் விஜயபாஸ்கர் மகள் ரிதன்யா – பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்று வருகிறது. இதில், முதல்வர், துணை முதல்வர், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிகவும் மதிப்பு வாய்ந்த ஆகாசவாணி சங்கீத சம்மேளனம், இனி பாரத ரத்னா பண்டித பீம்சென் ஜோஷி பெயரில் அழைக்கப்படும். இது குறித்த அறிவிப்பை புனேவில் நடைபெற்ற பண்டித பீம்சென் ஜோஷி நூற்றாண்டு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
அரசியல் நோக்கத்திற்காக போக்குவரத்தையும் பொது அமைதியையும் பாதிக்க கூடிய வகையில் சிலர் ஈடுபட்டு இருப்பதாக காவல் டிஜிபி சுற்றறிக்கை விடுத்துள்ளது .
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு (ம) விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, இச்சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் .
காவல்துறை உள்நோயாளிகளுக்கான மருத்துவமனைகளும், மருந்தகங்களும் 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நேற்று காலை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவு பிரபித்தும் முனாவர் ஃபாரூக் ( மேடை காமெடியர்) ஏன் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை? உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 30 மணி நேரம் ஆகிறது. நீதிமன்ற உத்தரவை மத்திய பிரேதேச காவல்துறை சிறை அதிகாரிகள் குறைத்து மதிப்பிடுகின்றனர். மாநில முதல்வர் அனுமதியுடன் இத்தகைய செயல் நடக்கிறதா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
பெங்களூரில் இருந்து சென்னைக்கு வருகைத் தரும் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டரில், ‘ பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக்கூடாது! எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட அன்பு வேண்டுகோள்’ என்று பதிவிட்டார்.
நாடு முழுவதும் 52,90000 பேருக்கு கோவிட் – 19 தொற்று தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று மத்தியக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்திருப்பதை வரவேற்கிறேன். ஆனால் இதில் ஆதிதிராவிட மக்கள் 1% கூட பயனடைய மாட்டார்கள். எனவே, ஆதிதிராவிட மக்கள் தாட்கோ மூலம் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும் என விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவராக எஸ்.என். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் பொறுப்பு வகிப்பார். இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கும் தலைசிறந்த பொறியாளரான சுப்பிரமணியன், அந்நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வர்த்தகத்திற்கு பல ஆண்டுகள் தலைமை வகித்ததோடு, அந்த நிறுவனத்தை நாட்டின் மிகப்பெரிய மற்றும் உலகின் 14-வது பெரிய கட்டுமான நிறுவனமாகவும் வளர்த்துள்ளார்.” என்று தெரிவித்தது.
பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி, ரயில் டிக்கெட்டுகளுடன் இப்போது பேருந்துகளுக்கான பயணச்சீட்டு முன்பதிவு சேவையையும் தொடங்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி. ஒ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
டிடிவி தினகரன் தனது ட்விட்டர் குறிப்பில்,” சசிகலா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பேசியதையெல்லாம் தமது வசதிக்கேற்ப திரித்து அமைச்சர் பதவியிலிருப்பதையும் மறந்து, நிதானமின்றி உண்மைக்கு புறம்பாக பேசி வருகிறார்கள். அதிகாரத்திலுள்ள இவர்கள் அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளையும்,டி.ஜி.பி.யிடம் மீண்டும் மீண்டும்தரும் பொய்புகார்களையும் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கைச்சீர்குலைக்க இவர்களே எதையாவது செய்துவிட்டு, அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என்று தெரிவித்தார்.
15 ஆவது நிதி ஆணையம், தமிழகம் வருவாய் உபரி மாநிலத்திலிருந்து வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியிருப்பதாக தெரிவித்துள்ளது. 2012-13 லிருந்து நிதிக் குறிகாட்டிகளும் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளன. தமிழகம் தனது நிதி அடிப்படைகளை மீட்க, ஆணையம் வலியுறுத்துகிறது. நம்மை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ள, திறமையற்ற அ.தி.மு.க ஆட்சியையே இது காட்டுகிறது என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.
சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வரை சந்தித்த விவசாயிகள்; கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட ரூ.12,110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்து அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி சென்னை அண்ணா சாலையில் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் பி.ஆர் பாண்டியன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியபிறகு விவசாய கடனை முதல்வர் பழனிசாமி தள்ளுபடி செய்தது சந்தர்ப்பவாதம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு பிப்.9ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கி நடைபெறவுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் ஆவணங்கள் மட்டுமின்றி நகைகளை வைத்து பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கும் இல்லை என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு சுதாகர் தகவல். அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சுதாகர் விளக்கம் அளித்துள்ளார்.
100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள். யார் அ.தி.மு.கவினர், இரட்டை இலை யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்திவிட்டது.
4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வரும் சசிகலா, அ.தி.மு.கவுக்கு உரிமை கோருகிறார். பொதுமக்கள் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்க திட்டமிடுகின்றனர். என்று தினகரன், சசிகலா மீது அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
டிஜிபியிடம் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் மீண்டும் மனு. சசிகலா தலைமையில் பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்து மனு.
சசிகலா நாளை மறுநாள் வரும் போது, சென்னையில் பேரணி நடத்த அமமுக திட்டம் .இன்று காலை அ.ம.மு.க காவல்துறையிடம் மனு அளித்தனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழகம், புதுச்சேரியில் “ஜக்கா ஜாம்” சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
கோவை, மதுரை, திருச்சி, ஆவடியில் உள்ள காவல் மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். சென்னை, சேலம், எல்லையில் உள்ள பகல்நேர காவல் மருத்துவமனை, மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் .
காவல் மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும் என முதலமைச்சர் உத்தரவு .
டி.என்.பி.எஸ்.சி வெளிமாநிலத்தவர்களை இறக்குமதி செய்யும் தளமாக மாறியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
பயிர்க்கடன் ரூ.12 ஆயிரத்து 110 கோடியை தள்ளுபடி செய்வதாக நேற்று அறிவிப்பு வெளியான நிலையில்,, 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளின் விவரங்களை சேகரிக்கும் பணியை தொடங்க முடிவு.
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு சங்க பதிவாளர் இன்று ஆலோசனை நடத்தப்படவுல்ளது. கூட்டுறவு வங்கி மேலாளர்கள், பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் பழனிசாமி. காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடைபெற உள்ளது
சென்னையில் சசிகலா தலைமையில் பேரணி நடத்த திட்டம் அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு. நாளை மறுநாள் பேரணி நடத்துவதாக மனுவில் தகவல் முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் சார்பில் மனு
சசிகலா தலைமையில் நடத்தப்படும் பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு என மனுவில் தகவல் ஜெயலலிதா நினைவிடம் வரை சசிகலா தலைமையில் பேரணி செல்ல திட்டம் .
தமிழகத்தில் உடல்நலக்குறைவு மற்றும் விபத்து காரணமாக உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ₨3 லட்சம் நிதியுதவி . முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
மியான்மரில் டுவிட்டர் சேவை முடக்கப்பட்டது. ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சேவைகளும் தடை செய்யப்பட்டுள்ளன
முதல்வர், துணை முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது அ.தி.மு.க. சசிகலா நாளை மறுநாள் தமிழகம் வர உள்ள நிலையில் ஆலோசனைக்ஊ ஏற்பாடு செய்யப்பட்டுல்லாஊ.
கொரோனா பெருந் தொற்று காரணாமாக மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கும், அவர்கள் வைத்திருக்கும் அரியர்களுக்கும் விலக்கு அளிப்பதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அரியர் ‘தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்பட மாட்டாது, அரியர் தேர்வுகள் நடத்தப்படும்’ என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி பிப்.16 முதல் 28ஆம் தேதி வரை அரியர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும்,
தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள முன்னாள் தமிழக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் பேரணி நடத்த திட்டமிட்டப் பட்டுள்ளதாகவும், அதற்காக அனுமதி கேட்டு சென்னை காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு நாளை மறுநாள் பேரணி நடத்துவதாக மனுவில் தகவல்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.