ஜோதிமணிக்கு குவிந்த ஆதரவு: டிரெண்டிங்கில் தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றவர் கரு நாகராஜன்.

By: May 19, 2020, 10:49:10 AM

Jothimani MP: டிவி நேரலை விவாதங்கள் தற்போது தமிழகத்தில், தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டன. அனைத்து செய்தி சேனல்களிலும், மாலை நேரங்களில் விவாத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை, ஏழு மணிக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம், என்ற விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதனை தொலைக்காட்சியின் இணை ஆசிரியர் நெல்சன் சேவியர் நெறியாள்கை செய்தார்.

கரு நாகராஜனை உட னே கைது செய்ய வேண்டும்: தலைவர்கள்- ஊடகவியலாளர்கள் வற்புறுத்தல்

இதில் திமுக எம்பி கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பாஜகவின் கரு நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கரு நாகராஜன், ஜோதி மணியை இழிவான சொற்களால் குறிப்பிட்டார். ஒரு பொது விவாதத்தில் பேசுகிறோம், அதுவும் லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியான, ஒரு நாடாளுமன்ற பெண் உறுப்பினரிடம் பேசுகிறோம், என்பதை மறந்து ஜோதிமணி குறித்து அவதூறாக பேசினார் கரு நாகராஜன்.

ஜோதிமணி எம்பி.க்கு டிவி நேரலையில் அவமரியாதை: பாஜக பிரமுகரை கண்டித்து வெளியேறினார்

இதனால் கோபமான ஜோதிமணி அவரை கண்டித்த கையோடு, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து திமுக எம்பி கலாநிதி, தனது கண்டனத்தை கரு நாகராஜனுக்கு தெரிவித்துவிட்டு, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பின்னர் இந்த விஷயம் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனைத்தொடர்ந்து ட்விட்டரில் #I_standwith_Jothimani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதில் நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதரவை, கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கு தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற கரு நாகராஜன்.

தமிழனாக அல்ல, இந்தியனாக அல்ல, மனிதனாக ஜோதிமணிக்கு நமது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:I stand with jothimani trending on twitter nettizens showed their support jothimani mp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X