கரு நாகராஜனை உடனே கைது செய்ய வேண்டும்: தலைவர்கள்- ஊடகவியலாளர்கள் வற்புறுத்தல்

“தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள்” என கனிமொழி எம்.பி தெரிவித்திருக்கிறார்.

Karu Nagarajan, jothimani mp, karur congress mp jothimani
Karu Nagarajan, jothimani mp, karur congress mp jothimani

Jothimani MP: டிவி விவாதத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை, பாஜக-வின் கரு நாகராஜன் இழிவாகப் பேசியது பெரும் விவாதமாகியிருக்கிறது. பெண் என்றும் பாராமல் பொது வெளியில் இழிவான வார்த்தைகளால் குறிப்பிட்ட கரு நாகராஜனுக்கு அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். அதோடு அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஜோதிமணி எம்பி.க்கு டிவி நேரலையில் அவமரியாதை: பாஜக பிரமுகரை கண்டித்து வெளியேறினார்

”மகளிருக்கு எதிரான பாஜகவின் அடிப்படைவாதமே அவருக்கு இத்தகைய துணிச்சலைத் தருகிறது. இது சனாதனத்தின் விளைச்சல்” என திருமாவளவன் எம்.பி தெரிவித்திருக்கிறார்.

ஜோதிமணிக்கு குவிந்த ஆதரவு: டிரெண்டிங்கில் தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்

“தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள்” என கனிமொழி எம்.பி தெரிவித்திருக்கிறார்.

”பொதுத்தளத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை இழிவாகப் பேசிய கரு.நாகராஜனை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?” என சுப.வீரப்பாண்டியன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

குரல் கொண்ட பெண்களை ஆண்கள், எல்லா இடத்திலும் துன்புறுத்தி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என ஊடகவியலாளர் கவிதா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

”ஜோதிமானியின் விவேகமான வாதங்களை எதிர்கொள்ள முடியாத கரு நாகராஜனின் விரக்தியை இது பிரதிபலிக்கிறது” என ஜவஹிருல்லா தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Political leaders says arrest karu nagarajan immediately who was derogatory to jothimani mp

Next Story
பாஜக.வின் இதுபோன்ற ஆபாசம் முதல் முறையல்ல: ஜோதிமணி எம்பிmp jothimani, Jothimani quits TV debate over Karu Nagarajan's derogatory speech
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com