IE Tamil Facebook live Adv Raveendran Duraisamy talks about 2021 election this evening at 5 pm : கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் தினமும் ஐ.இ. தமிழ் வாசகர்களுடன் உரையாடி வருகின்றனர் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள். அந்த வரிசையில் இன்று நம்முடன் நேரலையில் பேச உள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு அமைப்பாளராக இருக்கும் இவர் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக வாதாடிவரும் நபர்களில் மிகவும் முக்கியானவராவார். அரசியல் விமர்சகராகவும் அறியப்படும் இவர் 2021ம் ஆண்டுக்கான தேர்தல் களம் குறித்தும், கூட்டணிக் கட்சிகள், மக்களின் எண்ண ஓட்டங்கள் குறித்தும் பேச உள்ளார்.
மேலும் மருத்துவ இடங்களில் ஒ.பி.சி.க்கான இடங்களில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்தும், இன்றைய அரசியல் சூழல் குறித்தும் நம்மிடம் உரையாட உள்ளார். இவருடன் நீங்கள் உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால் சரியாக மாலை 05 மணிக்கு எங்களின் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
மருத்துவ இட ஒதுக்கீடு குறித்து துரைசாமி
மருத்துவக் கல்வியில் 3 வகைகளில் இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படுகிறது. ஒன்று, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில், மத்திய அரசு இட ஒதுக்கீடு நடைமுறைப்படி மருத்துவக் கல்வி இடங்கள் நிரப்பப்படுகின்றன. மாநிலங்களில் அந்தந்த மாநில இட ஒதுக்கீடு விகிதப்படி மருத்துவக் கல்வி சீட்களை நிரப்புகிறார்கள். இவை இரண்டிலும் இப்போது பிரச்னை இல்லை. இந்த கட்டுரையை முழுமையாக படிக்க