காதலை யார் முதலில் சொல்வது ? சென்னை ஐஐடியில் சக மாணவருக்கு கத்தி குத்து...

கோட்டூர்புரம் காவலர்கள் மனோஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

IIT Chennai student stabbed : ஹரியானாவைச் சேர்ந்தவர் ப்ரோமோத் கௌசிக். சென்னையில் இருக்கும் ஐஐடி கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு எம்.டெக் படித்து வருகிறார். அதே கல்வி நிறுவனத்தில் ஹரியானாவைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவரும் படித்து வருகிறார்.

நேற்று இருவருக்கும் மத்தியில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஐஐடி வளாகத்தில் அமைந்திருக்கும் செண்ட்ரல் லைப்ரேரி அருகே மனோஜ் ப்ரமோத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பித்து சென்றுவிட்டார்.

காதல் விவகாரத்தில் நேர்ந்த விபரீதம்

நேற்று மாலை 05:30 மணிக்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் மனோஜ் ப்ரமோத்தின் தோள்பட்டைப் பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் ப்ரோமோத்தை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர்.

கோட்டூர்புரம் காவலர்கள் மனோஜை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் இந்த இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாகவும், காதலர் தினத்தன்று யார் முதலில் அந்த பெண்ணிடம் காதலை சொல்வது என்ற குழப்பத்தின் விளைவாகவும் இந்த கத்திக் குத்து நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க : சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மாணவி தற்கொலை ஏன்? போலீஸ் விசாரணை

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close