/tamil-ie/media/media_files/uploads/2019/02/maxresdefault.jpg)
Ilayaraja 75 concert
Ilayaraja 75 concert : இளையராஜா 75 என்ற நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டன. பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்விற்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், சதீஷ்குமார் உள்ளிட்டோர் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, இறுதி நேரத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Ilayaraja 75 concert குறித்து விஷால் பேட்டி
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் விஷால் “சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்காகவே இந்த விழா நடத்தப்படுகிறது என்றும், நீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும்” செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் பேசினார்.
தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதி மற்றும் கணக்கு வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மார்ச் 3ம் தேதி நடைபெறும் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க : இளையராஜா 75 விழாவில் சூப்பர்ஸ்டார் – உலகநாயகன் ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.