illegal liquor sales soar high in Trichy : கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியிருக்கும் இந்த நேரத்தில் 40 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மே 3ம் தேதி தான் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும். இந்நிலையில் மதுபான கடைகள், பார்கள் , டாஸ்மாக் போன்றவை மூடப்பட்டுள்ளது.
Advertisment
இவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், மதுவுக்கு அடிமையாகி இருக்கும் பலரும் இந்நிலையில் பல்வேறு இடங்களில் கள்ளச் சாராயம் மற்றும் வீட்டிலேயே மதுபானம் தயாரிக்கும் நிலைமையை எட்டியுள்ளனர். ஒரு சிலர் சானிடைஸர் குடித்து பலியாகிய சம்பவம் நடந்துள்ளது.
சிலரோ டாஸ்மாக் கடைகளை உடைத்து உள்ளே இருந்து மதுபான பாட்டில்களை திருடிச் செல்கின்றனர். இந்நிலையில் திருச்சியில் உள்ள எடமலைப்பட்டி புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ஒருவர் ராம்ஜி நகர் பகுதியில் கபசுரக் குடிநீர் என்று கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்துள்ளார் 65 வயதான அந்த மூதாட்டி குடிநீர் விற்பனை செய்யும் கள்ளச்சாராயத்தை கூற்றி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”