Advertisment

நிர்வாகம் தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்; நீதித்துறை மீறலா?

தமிழ்நாடு ஆட்சி பணி தொடர்பாக மாநில அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்; நீதித்துறை மீறல் குறித்த கேள்விகளை எழுப்புகிறது நீதிமன்ற உத்தரவு

author-image
WebDesk
New Update
நிர்வாகம் தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்; நீதித்துறை மீறலா?

Arun Janardhanan

Advertisment

In Tamil Nadu, a High Court order raises questions of judicial overreach: தமிழ்நாட்டிற்கென தனி தமிழ்நாடு நிர்வாக சேவையை (தமிழ்நாடு ஆட்சி பணி - TNAS) அமைக்குமாறு மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால், நிர்வாகத்தில் நீதித்துறை தலையிடுவது குறித்த விவாதம் எழுந்துள்ளது.

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு ஆகியோர் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளனர். ஒரு ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் பி.டி.ஆர், நீதித்துறைக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான வேறுபாடு வேகமாக அழிந்து வருவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.

அவரை டேக் செய்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பரிசீலிக்க பரிந்துரைத்த ட்வீட்டிற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர், "நன்மைகள் இருந்தாலும், இந்த உத்தரவில் எங்களுக்கு சட்டபூர்வமான ஆலோசனை தேவைப்படும்" என்று மே 14 அன்று கூறினார். உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பித்தது.

மேலும், “சட்டசபையில் நான் சில முறை கூறியது போல், நீதித்துறை மற்றும் நிர்வாகத்திற்கு இடையேயான வேறுபாடு (அரசியலமைப்புச் சட்டத்தில்) வேகமாக அழிந்து வருவதாக இந்த உத்தரவுகள் காட்டுகின்றன. ஜனநாயகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மட்டுமே கொள்கையை உருவாக்க முடியும்,” என்றும் அமைச்சர் பிடிஆர் கூறினார்.

நீதிபதி எம்.கோவிந்தராஜ் தனது உத்தரவில், கேரள அரசு செய்தது போல், வருவாய் மற்றும் பொது நிர்வாகம் மற்றும் மாநில கொள்கைகளை அமல்படுத்துதல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய தமிழ்நாடு நிர்வாகப் பணியை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மாநில அளவிலான அனைத்து அதிகாரிகளையும் ஒரே மாதிரியாக நடத்தவும், அவர்களுக்கு சமமான வாய்ப்பை வழங்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், திறமையான நிர்வாகத்திற்காக அவர்களை தமிழ்நாடு நிர்வாக சேவைக்குள் (TNAS) கொண்டு வர மத்திய அரசுக்கு தகுந்த பரிந்துரைகளை வழங்குமாறும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

"ஆறு மாதங்களுக்குள் இந்த செயல்முறையை மாநில அரசு தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று நீதிபதி கோவிந்தராஜு உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

மாநில நிர்வாக சேவைப் பணிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர் பதவியை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த 2008 ஆம் ஆண்டு அரசாணையை எதிர்த்து, 98 மாநில அரசு அதிகாரிகள் தாக்கல் செய்த ரிட் மனு மீது நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. உதவி இயக்குனர், இணை இயக்குனர் மற்றும் கூடுதல் இயக்குனர் பதவிகளை "துணை கலெக்டர்" பதவிக்குள் சேர்த்து, இந்த பதவிகளுக்கு "மாநில சிவில் சர்வீசஸ்" என்ற அந்தஸ்து வழங்கவும், அவர்களில் தகுதியானவர்களை இந்திய நிர்வாக சேவைக்கு (இந்திய ஆட்சிப் பணி - ஐஏஎஸ்) உயர்த்தவும் மனுவில் கோரப்பட்டது.

“தமிழ்நாடு அரசுப் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்களைச் செய்வதற்கு” அரசாங்கத்தின் “பரந்த அதிகாரங்கள்” குறித்து குறிப்பிட்ட நீதிமன்றம், “காலனித்துவ காலத்தில் வரையறுக்கப்பட்ட துணை ஆட்சியரின் வரையறையை மாநில அரசு பின்பற்ற வேண்டும் என்ற கடினமான மற்றும் விரைவான விதி எதுவும் இல்லை." என்றும் கூறியது.

மாநில சிவில் சர்வீசஸ் பணிகளில் உயர் பதவிகளை அரசு சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்த நீதிமன்றம், “கேரள அரசைப் போலவே, மாநில சேவைப் பணிகளின் கீழ் வரும் அனைத்துப் பணியிடங்களும் பரிசீலிக்கப்பட்டு, பொது நிர்வாகத்தில் ஈடுபடுபவர்கள் மாநில சிவில் சேவை பணிகளில் சேர்க்கப்பட வேண்டும். துணை ஆட்சியர் பதவியை மட்டும் சேர்க்க வேண்டும் என்ற குறுகிய வரையறையானது, திறமையான, ஆற்றல் மிக்க மற்றும் புத்திசாலித்தனமான அதிகாரிகளைக் கொண்டிருப்பதில் இருந்து அரசாங்கமே அதன் சிறந்த நிர்வாகத்தை இழக்கச் செய்யும்.” என்றும் கூறியது.

குரூப்-1 சேவைகள் மற்றும் குரூப் I அல்லாத சேவைகளில் துணை ஆட்சியர் பதவிக்கு இணையான பல பதவிகள் உள்ளன, ஆனால் அவை இந்த பிரிவில் சேர்க்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. “... தமிழ்நாடு அரசுப் பணிக்கான சிறப்பு விதிகளில் துணை ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் என்ற வரையறையில் அவர்கள் சேர்க்கப்படாததால் மட்டுமே, அவர்கள் இந்திய ஆட்சி பணி உறுப்பினராக நியமனம் செய்யப்படவில்லை. உயர் பொறுப்புகளை வகித்து, மிக உயர்ந்த அடிப்படை ஊதியம் பெறுபவர்கள் மற்றும் மிகவும் சிக்கலான மற்றும் முக்கியமான கடமைகளை நிறைவேற்றுபவர்கள், இந்திய ஆட்சிப் பணியில் உறுப்பினர்களாக இருப்பதற்கு இரண்டு அல்லது மூன்று தசாப்தங்கள் காத்திருக்க வேண்டும், அதேசமயம், தற்செயலான சூழ்நிலையில் குறைந்த தகுதிகள் மற்றும் குறைந்த அறிவுத்திறன் கொண்ட வருவாய்த் துறையின் கீழ் பதவியில் நியமிக்கப்படும் நபர், மாநில அரசுப் பணியில் சேர்ந்த பிறகு, எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்குள் இந்திய நிர்வாகப் பணியில் சேர்க்கப்படுகிறார்கள்,” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சிறப்பு விதிகளில் உள்ள விதி 5-ல் துணை ஆட்சியர் என்ற வரையறையின் கீழ் சில பணியிடங்கள் உள்ளன என்றும், விதிகளைத் திருத்தாமல் சேர்ப்பதற்கான மனுவை ஏற்க முடியாது என்றும் மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஏனெனில் மாநில அரசு அத்தகைய பதவிகளை சேர்ப்பதற்காக அங்கீகரித்தால் தான், இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கூறுகையில், தமிழ்நாடு நிர்வாக சேவைகள் கொண்டு வரப்படும் யோசனை ஒரு ஒப்பனை மாற்றம் பற்றியது என்று கூறினார். மேலும், "தமிழகத்தில் சட்டமன்ற ஆட்சி இருக்கும்போது, ​​பதவி உயர்வு, வழிகள், ஆட்சேர்ப்புகள், தகுதிகள், அதற்கு எதிரான நடவடிக்கைகள் உட்பட அனைத்தும் விதிகளால் நிர்வகிக்கப்படும் போது, ​​​​நீதிமன்றம் சட்டத்தை உருவாக்கவோ அல்லது மாற்றவோ வழிகாட்ட முடியாது," என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம், 2016ஐ சுட்டிக்காட்டி நீதிபதி சந்துரு கூறினார்.

இதையும் படியுங்கள்: ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் – அவருடைய தாயார் அற்புதம்மாளின் கதை

அரசு அலுவலர்கள் வெவ்வேறு தரங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் நேரடி நியமன ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியவற்றுக்கு இடையேயான விநியோக விகிதங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தரத்தைச் சேர்ந்தவர்களை ஐஏஎஸ்ஸுக்கு தரம் உயர்த்துவதற்கு பரிசீலிக்க உரிமை உண்டு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, ஐஏஎஸ் பதவி யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின் முடிவு இது. இது தமிழ்நாட்டில் உள்ள மாநிலப் பணியாளர்களுக்கு சுமார் 20 சதவீதம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (TNPSC) இந்தச் செயல்பாட்டின் போது ஆலோசனை பெறுகிறது.

ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு கூறுகையில், அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரிவும் தனக்குள்ளேயே செயல்பட வேண்டும், மேலும் மற்றொரு பிரிவில் குறுக்கிட முடியாது, ஒரு நிறுவனம் செயல்படும் அளவுருக்கள் அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வுக்குள் மட்டுமே இருக்க முடியும் என்று கூறினார். மேலும், “பதவி உயர்வு இல்லை என்பது இல்லை, எப்போதும் இருக்கிறது... தமிழ்நாடு நிர்வாகப் பணிகள் பற்றிய யோசனை ஒரு ஒப்பனை பரிந்துரை மட்டுமே. ஏற்கனவே ஒரு நடைமுறை உள்ளது, மேலும் இரண்டு சேவைகள் உள்ளன, அவை தமிழ்நாடு மாநில சேவைகள் மற்றும் தமிழ்நாடு மாநில துணை சேவைகள். எனவே அரசாங்கத்தின் சட்டமன்ற மற்றும் நிர்வாக அதிகாரங்கள் ஒரு உத்தரவின் மூலம் நீதித்துறையால் கையகப்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை” என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment