Advertisment

சென்னை பனையூர் இல்லத்தில் விஜய்யிடம் தீவிர விசாரணை! நடந்தது என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை பனையூர் இல்லத்தில் விஜய்யிடம் தீவிர விசாரணை! நடந்தது என்ன?

ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. விஜய் நடித்திருந்த பிகில் படத்தையும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

Advertisment

இந்நிலையில், பிகில் படத்தில் நடித்த விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரிச் சுரங்க வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

அங்கே நேரில் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய்க்கு சம்மன் அளித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

விஜய்யை அழைத்துச் சென்று விசாரணை:

விஜய், விஜய் சேதுபதி மோதும் கிளைமேக்ஸ் காட்சிகள் நெய்வேலி என்எல்சியில் படமாக்கப்பட்டு வந்தன. அங்கு ஷூட்டிங்கில் இருந்த போது தான் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, அவரை படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவரது காரிலேயே அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

5, 2020

Live Blog

IT Raid Investigate Actor Vijay Master Shooting : நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை விசாரணை














Highlights

    22:30 (IST)05 Feb 2020

    சிவகார்த்திகேயனும் உள்ளே வருகிறார்....

    அஜித் ரசிகர்களின் மற்றொரு 'தீயா வேலை செய்யணும் குமாரு' மோடில் வெளியாகியிருக்கும் வீடியோ,

    22:26 (IST)05 Feb 2020

    விஜய் விவகாரத்தில் அன்புமணி எப்படி வந்தார்?

    வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் பற்றி செய்தி ஒன்று, தற்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

    தீயா வேலை செய்யுறாய்ங்கப்பா!!

    22:22 (IST)05 Feb 2020

    சென்னைக்கு கொண்டு வரப்பட்ட விஜய் - வீடியோ

    விசாரணைக்காக விஜய்யை சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், விஜய் காரில் அமர்ந்திருப்பதாக கூறப்படும். போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. 

    22:19 (IST)05 Feb 2020

    அஜித் - விஜய் ரசிகர்கள் மோதல்

    சாதாரணமாக ஒரு படம் ரிலீஸ் ஆனாலே அஜித் - விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்வார்கள். இதில், விஜய்யிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வரும் போது சும்மா இருப்பார்களா. 

    அஜித் ரசிகர்கள் என்ற அடையாளத்தோடு சிலர் ட்விட்டரில், விஜய்யை கிண்டல் செய்யும் விதமாக பல போஸ்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 

    21:49 (IST)05 Feb 2020

    டிரெண்டிங்கில் விஜய்...

    சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், ட்விட்டரில் விஜய் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றன. 

    #WeStandWithVijay
    #வரிஏய்ப்புவிஜய்
    #ITRaid

    20:56 (IST)05 Feb 2020

    விஜய் சென்னை அழைத்து வரப்பட்டார்

    கடலூர், நெய்வேலியிலிருந்து நடிகர் விஜய் சென்னை அழைத்து வரப்பட்டார். வருமானவரித்துறை வாகனத்தில் வந்த விஜய்யிடம், பனையூர் இல்லத்தில் வைத்து விசாரணை தொடர்ந்து நடக்கிறது

    20:17 (IST)05 Feb 2020

    நாளையும் சோதனை தொடரும்

    "இன்றைய சோதனையில் ஏஜிஎஸ் சினிமாஸ், அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில்வராத ரூ.24 கோடி பறிமுதல். கணக்கில் வரவு வைக்கப்படாத ஏராளமான தங்க நகைகளும் சிக்கியுள்ளன. ரொக்கம், நகை குறித்து விளக்கம் கேட்டது வருமானவரித்துறை. நாளையும் சோதனை தொடரும்" என தகவல் வெளியாகியுள்ளது.

    19:26 (IST)05 Feb 2020

    விசாரணைக்கு வந்த அதிகாரிகள்...

    நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பின் போது, விசாரணைக்கு வந்த அதிகாரிகளின் வீடியோ,

    18:46 (IST)05 Feb 2020

    இன்னும் சற்று நேரத்தில்....

    வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இன்னும் சற்று நேரத்தில் சென்னை வந்து சேருகிறார் விஜய். நேராக, அவரது வீட்டுக்கு செல்லும் அதிகாரிகள் பணப் பரிவர்த்தணை தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர்.

    18:27 (IST)05 Feb 2020

    Vijay - விஜய்யின் நெருங்கிய வட்டாரம் கூறுவது என்ன?

    நடிகர் விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, "நெய்வேலியில் ஷூட்டிங் நடந்த இடத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்ததால். ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்கள் விஜய்யின் போன படத்தின் வருமானம் குறித்த தகவலை பெற 'உதவி' புரியுமாறு கூறினர்" என்று தெரிவித்தனர். இதுவரை விஜய்க்கு எதிராக எந்த வழக்கும் பதியப்படவில்லை" என்றும் அவர் கூறினர்.

    18:15 (IST)05 Feb 2020

    விஜய்யிடம் விசாரணை - உண்மையில் நடந்தது என்ன?

    நடந்தது என்ன?

    நெய்வேலி நிலக்கரி சுரங்கம் வளாகத்தில் நடந்த மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே விஜய்யிடம் முதலில் விசாரணை நடந்தது. கிட்டத்தட்ட 3-4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது சில பணப் பரிவர்த்தணை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சென்னையில் உள்ள அவரது கணக்கு வழக்குகளை பார்த்த பிறகே பதில் சொல்ல முடியும் என விஜய் கூறியதால், அதற்கான விளக்கத்தைப் பெறவே அவரை கையோடு சாலை மார்க்கமாக சென்னை அழைத்து வருகிறது வருமான வரித்துறை. 

    விஜய்யின் காரில் வைத்தே அவர் அழைத்து வரப்படுகிறார். 

    சென்னை வந்ததும், அவரின் பணப் பரிவர்த்தணை விவரங்களை ஐடி அதிகாரிகள் பெறவுள்ளனர்.

    18:02 (IST)05 Feb 2020

    விஜய் கஸ்டடியில் எடுக்கப்பட்டாரா?

    நடிகர் விஜய் கஸ்டடியில் எடுக்கப்பட்டார் போன்ற தகவல்களை மறுத்துள்ள ஐடி அதிகாரிகள், அவர் நெய்வேலியில் இருந்து சாலை மார்க்கமாக சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக தெரிவித்துள்ளனர். பணப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணைககாக அவர் சென்னை கொண்டு வரப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

    17:49 (IST)05 Feb 2020

    ஏஜிஎஸ் ட்வீட்

    பிகில் பட ரிலீஸின் 100வது நாளை கொண்டாடும் விதமாக ஏஜிஎஸ்திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதுகுறித்த வீடியோவை நேற்று தான் ஏஜிஎஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. 

    17:44 (IST)05 Feb 2020

    இரண்டு வீட்டிலும் சோதனை

    சென்னையில் நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

    17:40 (IST)05 Feb 2020

    Vijay - விஜய் வீட்டில் ரெய்டு

    விஜய் சென்னைக்கு அழைத்துக் கொண்டு வரப்படும் சூழலில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

    17:19 (IST)05 Feb 2020

    இரண்டாவது முறையாக விசாரணை

    இரண்டாவது முறையாக நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை விசாரணை. 2015 ஆம் ஆண்டு புலி திரைப்படம் வெளியான தருணத்திலும் வருமானவரித்துறை அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    17:06 (IST)05 Feb 2020

    Income Tax Investigate Vijay - சென்னை அழைத்து வரப்படுகிறார் நடிகர் விஜய்

    5 மணி நேர விசாரணைக்குப்பிறகு சென்னை அழைத்துவரப்படுகிறார் நடிகர் விஜய், அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வருமானவரித் துறை முடிவு.

    17:01 (IST)05 Feb 2020

    IT Raid Vijay - சென்னைக்கு விஜய் புறப்பட்டதாக தகவல்...

    இந்தச் சூழ்நிலையில், வருமான வரித்துறை விசாரணையைத் தொடர்ந்து நெய்வேலியில் நடைபெற்று வந்த மாஸ்டர் படபிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு விஜய் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    17:00 (IST)05 Feb 2020

    அர்ச்சனா கல்பாத்தி ட்வீட்

    சமீபத்தில், ட்வீட் ஒன்றில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி, '2019ம் ஆண்டில் அதிக வசூல் குவித்த படம் பிகில் தான்' என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    16:59 (IST)05 Feb 2020

    விஜய்யை அழைத்துச் சென்று விசாரணை

    ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த பிகில் படம் வரவு, செலவு தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பிகில் படத்தில் அவருக்கு சம்பளமாக ரூ.50 கோடி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது

    Actor Vijay
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment